விராட் கோலி இத மட்டும் செய்யுங்க.. ஆர்சிபி வேற லெவல் டீமா மாறிடும் – ஏபி.டிவில்லியர்ஸ் அட்வைஸ்

0
243
Virat

நடப்பு 17ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும் ஆர்சிபி அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வழக்கம்போல் சிஎஸ்கே அணியிடம் சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வி அடைந்தது.

இதற்குப் பிறகு சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்திற்கு திரும்பி பஞ்சாப் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாட அந்த அணி வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிராக ஆர் சி பி அணி சொந்த மைதானத்தில் படுதோல்விகளை சந்தித்து இருக்கிறது.

- Advertisement -

எல்லோரும் அந்த அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று பேசி வந்த நிலையில், அந்த அணியின் பேட்டிங் யூனிட்டும் மிக மோசமாக செயல்படுகிறது. அந்த அணியில் இதுவரை சிறப்பாக விளையாடிய ஒரே பேட்ஸ்மேனாக விராட் கோலி மட்டுமே இருக்கிறார். கேப்டன் பாப், மேக்ஸ்வெல் மற்றும் கிரீன் என உலகத்தரமான பேட்மேன்கள் அனைவரும் சொதப்புகிறார்கள். இளம் இந்திய பேட்ஸ்மேன்களும் சரியாக விளையாடவில்லை.

இதன் காரணமாக ஆர்சிபி அணிக்கு அடுத்தடுத்த தோல்விகள் வந்து கொண்டே இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் வாங்கிய அணியை விட, அடுத்தடுத்த ஆண்டுகளில் மினி ஏலத்தில் மாற்றியமைக்கப்பட்ட அணி தான் மிகவும் சுமாராக விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப விராட் கோலி என்ன செய்ய வேண்டும் என ஆர்சிபி லெஜெண்ட் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “விராட் கோலி வழக்கம் போல் நம்பிக்கைவுடன் தொடக்க இடத்தில் தொடர்வார். ஏனென்றால் மிடில் வரிசையில் நல்ல பசை தேவைப்படுகிறது. பேட்டிங்கில் விராட் கோலியின் தேவை ஆர்சிபி அணிக்கு பவர் பிளே முடிந்து அதிகம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக கேப்டன் பாப் அதிக ரிஸ்க் எடுக்கட்டும். ஆனால் 6 முதல் 15 ஓவர்களில் இருக்க வேண்டும். அப்போது அணி வேறு லெவலில் பேட்டிங் செய்யும்.

- Advertisement -

இதையும் படிங்க : அகர்கர் இந்த பையனுக்கு டி20 உலக கோப்பைக்கு பிளைட் டிக்கெட் போடுங்க.. இவன் ஸ்பெஷல் பேட்ஸ்மேன் – மைக்கேல் வாகன் கோரிக்கை

ஆர்சிபி தற்பொழுது மிக மோசமான நிலைமையில் கிடையாது அதே சமயத்தில் சிறப்பாகவும் இல்லை. இரண்டுக்கும் நடுவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போதைய தேவை இரண்டு வெற்றிகள். அவர்கள் மீண்டும் சின்னசாமி மைதானத்திற்கு திரும்புவதற்கு முன்னால் தங்களின் அதிர்ஷ்டத்தை கண்டுபிடிப்பார்கள்” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்