“இங்கிலாந்து அணிக்கு ஒரு ஸ்பெஷல் பழக்கம் இருக்கு.. 2 மடங்கு திருப்பிக் குடுத்திருக்காங்க” – நாசர் ஹுசைன் பேச்சு

0
62
Hussain

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி எல்லாவிதமான விமர்சனங்களும் கருத்துகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணியை அறிவித்த போது இருந்து, இந்தியாவில் இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறை சரிவராது என பலரும் கூறி வந்தார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில் இந்தியா வந்த இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி அடையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அங்கிருந்து இங்கிலாந்து அணியை தனி ஒரு வீரராக போப் 196 ரன்கள் குவித்து மீட்டது அவருடைய கிரிக்கெட் வாழ்வின் மிகச்சிறந்த இன்னிங்ஸாக அமைந்தது. 231 ரன்கள் நோக்கி விளையாடிய இந்திய அணியை 202 ரன்னில் சுருட்டி இங்கிலாந்து அபார வெற்றி பெற்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது ஆஸ்திரேலியா மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை விட, பெரிய அணியான இங்கிலாந்து இந்தியாவில் வைத்து இந்தியாவை வீழ்த்தியதுதான் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியை வெளிநாடுகள் வெல்வது என்பது மிகக் கடினமான ஒன்று.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறும்பொழுது ” இந்த இங்கிலாந்து அணி இடம் எனக்கு மிகவும் பிடித்தது அவர்களுடைய பிடிவாதம். நீங்கள் அவர்களைச் சந்தேகப்பட்டால் அந்த பிடிவாதத்தை அவர்கள் இன்னும் இரண்டு மடங்கு அதிகமாகி தருவார்கள். அவர்களுக்கு தற்போது என்ன வேண்டும் என்று நன்றாகத் தெரியும்.

அவர்களுக்குத் தேவையானதில் அவர்கள் மிகச் சரியாக செயல்பட்டு வீரர்களை திருப்பிக் கொண்டு வருவார்கள். இந்த இங்கிலாந்து அணி குழப்பம் இல்லாத ஒரு அணியாக இருக்கிறது.

இதையும் படிங்க : “ரோகித் சர்மா கேப்டன்சி ரொம்ப மோசம்.. அவர் பீல்டில் எதுவுமே செய்யல” – மைக்கேல் வாகன் விமர்சனம்

இந்தியா இங்கிலாந்து அணியை முடக்கும் அளவுக்கு முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் எடுத்தார்கள். அவர்கள் சில விக்கெட்டுகளை சுலபமாக அந்த நேரத்தில் கொடுத்தார்கள், இல்லை என்றால் இன்னும் ரன்கள் நிறைய எடுத்து இருக்க முடியும்.

நிச்சயம் இந்தியா இந்த தொடரில் திரும்பி வருவார்கள். இந்தியா மிகச் சிறந்த அணி, இங்கிலாந்துக்கு இந்த தொடர் இன்னும் கடினமாகத்தான் இருக்கும். ஆனாலும் இந்தியாவுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி. ஏனென்றால் இந்தியாவிலும் பாஸ்பால் செயல்படும் என காட்டப்பட்டு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -