“ரோகித் சர்மா கேப்டன்சி ரொம்ப மோசம்.. அவர் பீல்டில் எதுவுமே செய்யல” – மைக்கேல் வாகன் விமர்சனம்

0
136
Rohit

2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி இந்த ஐந்து போட்டிகளையும் தோற்று இந்தியாவில் இருந்து வெளியேறும் என்று நிறைய கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களுடைய கணிப்புகளை கூறியிருந்தார்கள்.

- Advertisement -

மேலும் இந்திய சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான சூழல்களில், தாக்கி ஆடும் வழக்கத்தை வைத்திருக்கும் இங்கிலாந்து அணியால் டெஸ்ட் போட்டியை வெல்வது முடியாத விஷயம் என்று கூறப்பட்டது.

இதற்கேற்றபடி இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் இந்திய அணி 436 ரன்கள் எடுத்தது. இப்படியான நிலையில் தவறுகளை திருத்திக்கொண்டு ஆனால் அதிரடியை நிறுத்தாமல் இரண்டாவது இன்னிங்ஸில் 420 ரன்கள் குவித்து, இந்திய அணியை 202 ரன்னில் மடக்கி, 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இங்கிலாந்து வேனியின் துணை கேப்டன் போப் மிகச் சிறப்பாக விளையாடி 196 ரன்கள் குவித்தார். ஆசியா தாண்டி வெளிநாட்டு பேட்ஸ்மேன் ஒருவர் இந்தியாவில் விளையாடிய மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் இதுவென பார்க்கப்படுகிறது.

போப் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது அவருக்கு எதிராக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா எந்தவிதமான சிறந்த திட்டங்களையும் களத்தில் கொண்டு வரவில்லை என, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக சாடி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ரோகித் சர்மா கேப்டன்சி மிகவும் சராசரியாக இருக்கிறது. அவர் களத்தில் எதிர்வினை ஆற்றக் கூடியவராக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் களத்தில் எந்தவித தந்திரமான நடவடிக்கைகளையும், சரியான பந்துவீச்சு மாற்றங்களையும் செய்யவில்லை. மேலும் போப் அடித்த ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப்புக்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை.

இதையும் படிங்க : “நாங்க தோற்றது 4வது நாளில் இல்லை.. 2வது நாளில்தான்” – வித்தியாசமான காரணம் கூறும் டிராவிட்

நான் பார்த்த மிகச்சிறந்த சுழற் பந்துவீச்சாளரான வார்னே, பேட்ஸ்மேன்களை ரவுண்ட் த ஸ்டெம்பில் இருந்து வந்து பந்து வீசி, ஸ்வீப் அடிக்க வைப்பது சிறந்தது என்று கூறுவார். ஆனால் ரோகித் சர்மா அப்படி எதையும் செய்யவில்லை.

இங்கிலாந்து விளையாடும் விதத்தில் இது மிகவும் எளிமையானது. அவர்கள் சாதாரணமாக பவுண்டரிகள் அடிப்பார்கள். மேலும் ஃபீல்டிங்கை தளர்த்தி பீல்டர்களை வெளியே வைக்கும் பொழுது, இந்திய பந்துவீச்சாளர்கள் வீசும் சிறந்த பந்துக்கு கூட, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் எடுப்பார்கள்” என்று கடுமையாகக் கூறியிருக்கிறார்.

- Advertisement -