இஷான் கிஷான் குர்னால் பாண்டியா.. பிசிசிஐ திடீர் அதிரடி நடவடிக்கை.. வெளியான புதிய தகவல்

0
421
Ishan

டி20 லீக்குகளின் வளர்ச்சி வீரர்களை சர்வதேச கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைக்க செய்திருக்கிறது என்று கூற வேண்டும்.

இது இந்தியா தாண்டி மற்ற நாடுகளில் தொடர்ந்து வந்தாலும், குறிப்பாக வெஸ்ட் இண்டிஸ் மாதிரியான நாடுகளில் இந்த வழக்கம் மிக அதிகமாக தற்பொழுது காணப்படுகிறது.

- Advertisement -

ஆனால் இந்த பழக்கம் இந்திய கிரிக்கெட்டிலும் இப்பொழுது நுழைய ஆரம்பித்து விட்டது. ஆனால் பிசிசிஐ உடனே சுதாரித்து இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறது.

தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து விலகிய இஷான் கிஷான் அதற்கடுத்து இதுவரை தனது அணியான ஜார்க்கண்ட் அணிக்கு ரஞ்சி தொடரில் பங்கேற்கவே இல்லை.

அதே சமயத்தில் அவர் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோருடன் இணைந்து ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

இதன் காரணமாக பிசிசிஐ கடுமையான அதிருப்தி அடைந்திருக்கிறது. காயம் காரணமாக என்சிஏ வில் இல்லாதவர்கள், மேலும் இந்திய அணியில் இல்லாதவர்கள் என இரண்டு தரப்பு வீரர்களும், தங்களது மாநில அணிகளுக்கு தங்கள் நிலை என்ன என்பதை உடனே தெரிவிக்க வேண்டும் என பிசிசிஐ கூறியிருக்கிறது.

ஐபிஎல் நெருங்குகின்ற காரணத்தினால் வீரர்கள் தங்களை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடுவித்துக் கொண்டு, ஐபிஎல் தொடருக்கு தயாராக ஆரம்பித்து விடுகிறார்கள். எனவே இதை சமாளிக்க பிசிசியை திடீரென அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : “விராட் கோலியின் பேரை சரி பண்ணனும்” – ரசிகரின் கேள்விக்கு ரோகித் சர்மா பதில்

இதில் முதல் நடவடிக்கையாக இசான் கிஷான் மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோர் தங்கள் மாநில அணிக்கு தங்களைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என பிசிசிஐ கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.