“விராட் கோலியின் பேரை சரி பண்ணனும்” – ரசிகரின் கேள்விக்கு ரோகித் சர்மா பதில்

0
130
Virat

சமகாலத்தில் உலக கிரிக்கெட்டில் இந்திய அணியில் இருந்து இரண்டு பெரிய பேட்ஸ்மேன்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பார்க்கப்படுகிறார்கள்.

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து விராட் கோலி தவிர வேறு யாருமே தொடர்ச்சியாக ரன்கள் குவித்து வருபவர்களாக கிடையாது.எனவே உலக கிரிக்கெட்டில் அவருடைய இடம் என்பது அவருக்கு மட்டுமே.

- Advertisement -

அதே சமயத்தில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மிகவும் சிறப்பான வீரராக இருந்து வருகிறார். துவக்க வீரர் என்பதால் அணி நிர்வாகத்தில் வழங்கப்படும் வேலையை செய்வதில் அவருடைய கவனம் இருக்கிறது.

விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு அடுத்து அதிக ரன்கள் அடித்த வீரராக அவர் இருக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களிலும் அவரை வருகிறார்.

நடுவில் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் இருப்பதாக எழுதப்பட்டது. மேலும் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்ந்து கொள்ள ரோகித் சர்மா அந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

அந்த நேரத்தில் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் திடீரென சரிந்திருந்தது. இந்திய கிரிக்கெட்டை சுற்றி பல விதமான யூகங்கள் பேசப்பட்டு வந்த நேரம் அது.

தற்போது ரசிகர்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ரசிகர்கள் தங்களுடைய கேள்வியை எழுதி இருக்க, அதற்கு ரோகித் சர்மா பதில் அளித்தார்.

அதில் ஒரு கேள்வியாக விராட் கோலியை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டிருந்தது. ஆனால் விராட் கோலி என்று எழுதியதில் எழுத்துப் பிழை இருந்தது.

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த ரோஹித் சர்மா ” முதலில் விராட் கோலியின் பெயரில் உள்ள எழுத்துப் பிழையை சரி செய்யுங்கள்” என்று கூறினார். அந்தக் கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.

இதையும் படிங்க : வீடியோ.. நூற்றாண்டின் சிறந்த பந்து.. ஆகாஷ் சோப்ரா வியப்பு.. ஷேன் வார்னே ஸ்டைலில் குவைத் கிரிக்கெட்டர் அசத்தல்

அதே சமயத்தில் விராட் கோலி பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருந்த சமயத்தில் மீடியாக்கள் கேள்வி முன்வைத்த பொழுது ” பிரச்சனையே நீங்கள்தான். நீங்கள் அமைதியாக இருந்தால் எல்லாமே சரியாகிவிடும். விராட் கோலி மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆதரவு தெரிவித்திருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.