துலீப் கோப்பை தொடரின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் நார்த் ஜோன் எதிரான போட்டியில் ஈஸ்ட் ஜோன் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நார்த் ஜோன் அணி 405 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக நார்த் ஜோன் வீரர்களில் கன்ஹையா வத்வான் 76 ரன்கள் எடுத்தார். ஆயுஸ் பதோனி 63 ரன்களும், நிசாந்த் சித்து 47 ரன்களும் எடுக்க, நார்த் ஜோன் 405 ரன்கள் எடுத்தது. இதில் ஈஸ்ட் ஜோன் பந்துவீச்சில் சமி 23 ஓவர்கள் வீசி 100 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். மனுஷி என்ற வீரர் ஆறு விக்கெட் கைப்பற்றினார்.
இதனை அடுத்து ஈஸ்ட் ஜோன் அணி பேட்டிங் தடுமாறியது. கம்பீரின் செல்ல பிள்ளையான ஹர்ஷித் ரானா, காஷ்மீரை சேர்ந்த அக்யூப் நபி என்ற வீரரும் அபாரமாக பந்து வீசி நார்த் ஜோன் வீரர்களை திணறடித்தனர். இதேபோன்று ஆர்ஸ்தீப் 17 ஓவர்கள் வீசி 52 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
சிறப்பாக பந்துவீசிய அக்யூப் நபி ஹாட்ரிக் உள்பட ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற ஹர்சித் ரானா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஈஸ்ட் ஜோன் 230 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.இதேபோன்று சென்ட்ரல் ஜோன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணி தடுமாறி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சென்ட்ரல் ஜோன் அணியில் மாலேவர் 203 ரன்கள் எடுத்தார்.
மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க, ரிட்டயர்ட் அவுட் ஆக யாஸ் ரோத் 87 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ரஜத் பட்டிதார் நேற்றே 125 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் முதலில் சென்ட்ரல் ஜோன் அணி 532 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து நார்த் ஈஸ்ட் அணி களம் இறங்கியது. இதில் எந்த பேட்ஸ்மேனும் நினைத்து நின்று ஆடவில்லை.
இதையும் பாருங்க: அடுத்த புஜாரா ரெடி? யார் இந்த டேனிஷ் மாலேவர்.. 21 வயதில் துலீப் கோப்பையில் இரட்டை சதம்
தற்போது அந்த அணி 65 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருக்கிறது. இதில் சென்ட்ரல் ஜோன் சார்பாக பந்து வீசிய தீபக் சாகர், கலீல் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்து வீசினாலும் விக்கெட்டுகள் எதுவும் எடுக்கவில்லை. ஹரிஷ் துபே இரண்டு விக்கெட்டுகளையும் ஆதித்யா தாக்கரே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.