2025-26 உள்நாட்டு கிரிக்கெட் சீசன் துலீப் கோப்பையுடன் தொடங்கியது. இதில், விதர்பாவின் இளம் பேட்டிங் நட்சத்திரமான டேனிஷ் மாலேவர் தனது அபாரமான பேட்டிங் திறமையால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 21 வயதான இவர், சென்ட்ரல் ஜோனுக்கு எதிராக வடகிழக்கு ஜோனுக்கு எதிராக 203 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம், இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார்.மாலேவர் 2024 இறுதியில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து வேகமாக உயர்ந்து வருகிறார். அவர் தனது முதல் ரஞ்சி சீசனில் 783 ரன்கள் குவித்தார். இதில் கேரளாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 153 ரன்கள் எடுத்து விதர்பாவுக்கு மூன்றாவது ரஞ்சி கோப்பை வென்றார்.
யார் இந்த டேனிஷ் மாலேவர்?
அந்த சீசனில் அவர் யஷ் ரத்தோட் மற்றும் கருண் நாயருக்கு அடுத்து விதர்பாவின் மூன்றாவது அதிக ரன் குவிப்பவராக இருந்தார். இப்போது, அவர் துலீப் கோப்பை வரலாற்றில் விதர்பாவின் முதல் சதமடித்தவராகவும் ஆனார். அவரது திருப்புமுனை 2024 ரஞ்சி கோப்பை நாக்-அவுட் கட்டங்களில் வந்தது. மும்பைக்கு எதிரான அரையிறுதியில் 79 ரன்கள் எடுத்து போராடிய மாலேவர், கேரளாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் நட்சத்திரமாக ஜொலித்தார்.
அந்த சீசனில் அவர் 52.20 சராசரியுடன் முடித்தார். அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக கடந்த சீசனில் ஐந்தாவது அதிக ரன் குவிப்பவராக இருந்தார்.நாக்பூரில் பிறந்த இவர், மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்யும் போது, ராகுல் டிராவிட் மற்றும் சேதேஷ்வர் புஜாராவைப் போல அமைதியான மனநிலையும், பந்துவீச்சாளர்களை அசைத்து ஆடும் திறனும் கொண்டவர்.
10 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர், ஐந்து முறை 50 ரன்கள் எடுத்து, பல முறை சதங்களாக மாற்றி, 65.40 என்ற அபார சராசரியைப் பெற்றுள்ளார். ஆனால், இவருடைய பயணம் எளிதாக இல்லை. ஏனெனில் அவர் நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர். இது குறித்து பேசிய மாலேவர், “எனது தந்தை எப்போதும் என்னை கிரிக்கெட் வீரராக்க விரும்பினார்.
ரசிகர்கள் தந்த பரிசு:
நான் ஏழு வயதில் ஒரு அகாடமியில் சேர்ந்தேன். பல சிரமங்களை எதிர்கொண்டார், ஆனால் எனது கிரிக்கெட் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. எனது ஆரம்ப நாட்களில் நான் ரன்கள் அடித்தபோது, மக்கள் எனக்கு பேட்கள், பேடுகள் மற்றும் கையுறைகள் வழங்கினர். எனது 19 வயதுக்கு பிந்தைய காலத்தில் தான் பணம் வரத் தொடங்கியது,” என்று மாலேவர் கூறினார்.
இதையும் படிங்க: துபாய்க்கு ஜெய்ஸ்வால் பிரசித் யாரும் வர வேண்டாம்.. 17 க்கு 15 பேர் போதும்.. கில்லை காப்பாற்ற ஸ்பெஷல் நடவடிக்கையா?
துலீப் கோப்பை ஆட்டத்தில் கூட மாலேவர் ஆரம்பத்திலேயே களமிறங்கி, அபாரமான முதிர்ச்சியுடன் இன்னிங்ஸை நங்கூரமிட்டார். முதலில் ஆர்யன் ஜூயலுடன் 144 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.அவர் 60 ரன்களில் காயம் காரணமாக ஓய்வு பெற்றார். பின்னர், கேப்டன் ராஜத் பட்டிதாருடன் 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அவர் 96 பந்துகளில் 125 ரன்கள் அடித்தார். மாலேவரின் அற்புதமான இரட்டை சதம், நீண்ட இன்னிங்ஸ் ஆடும் அவரது திறனை காட்டுகிறது.






