ரிக்கி பாண்டிங் புது ப்ளான்.. ஹாரி புரூக் இடத்துக்கு.. ஆல் இன் ஆல் பாஸ்ட் பவுலரை தூக்கி இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ்

0
66
Brook

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. தற்பொழுது ஹாரி புரூக் இடத்திற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை வாங்கி இருக்கிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் திரும்ப வந்தது பலமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அவர் பேட்ஸ்மேன் ஆக மட்டுமில்லாமல் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் பேட்டிங்கில் இரண்டு அரை சதங்களும் அடித்திருக்கிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் ரிஷப் பண்ட் திரும்பி வந்தாலும், அந்த அணியின் முக்கிய இந்திய வீரர்களான குல்தீப் யாதவ் மற்றும் முகேஷ் குமார் இருவரும் காயம் அடைந்திருப்பது பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. இருவருமே ரன் வேகத்தை கட்டுப்படுத்துவதோடு, எதிரணியின் விக்கெட்டுகளையும் கைப்பற்ற கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடந்த இரண்டு போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 272 ரன்கள், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 234 ரண்களை பந்து வீச்சில் விட்டுக் கொடுத்திருக்கிறது. அதேபோல் பேட்டிங்கில் அந்த அணி இந்த இரண்டு பெரிய இலக்குகளையும் துரத்தும் பொழுது 200 ரன்களை தாண்டி இருக்கிறது. எனவே தற்பொழுது அந்த அணிக்கு பவுலிங் யூனிட் தான் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.

இதை எப்படியாவது சரி செய்ய வேண்டிய நெருக்கடியில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம், குடும்ப காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய டெல்லி அணியின் வீரர் ஹாரி புரூக் இடத்திற்கு, தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் லிசார்டு வில்லியம்சை 50 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : மயங்க் யாதவ் காயம் எப்படி இருக்கிறது?.. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவாரா – யாஸ் தாகூர் வெளியிட்ட தகவல்

இந்த தென் ஆப்பிரிக்க வலதுகை வேகப்பந்துவீச்சாளர், 11 சர்வதேச டி20 போட்டிகள் விளையாடியிருக்கிறார். மேலும் ஆட்டத்தின் எல்லா பாகங்களிலும் பந்து வீசக்கூடியவர். பெரிய காயத்தில் இருந்து திரும்பி வந்திருக்கும் அதிவேக பந்துவீச்சாளர் அன்றிச் நோர்க்கியா பழையபடி பந்து வீச முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். அவர் ஓவர்களில் நிறைய ரன்கள் விட்டுத் தரப்படுகிறது. கடந்த போட்டியில் ரொமாரியோ செப்பர்ட் இவரின் ஒரே ஓவரில் 32 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.