10 பந்துக்கு 28 ரன்.. ரிங்கு சிங்கை பார்த்து கத்துக்கிட்டேன் – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
603
Rinku

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை ஆர்சிபி நிர்வாகம் வாங்கி, அவருக்கென்று பினிஷர் ரோலை தனிப்பட்ட முறையில் கொடுத்து, அந்த வருட ஐபிஎல் தொடரில் அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, இந்திய டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம் பிடித்தார். அவருக்கு பினிஷிங் இடம் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து பயன்படுத்தியதில் ஆர்சிபியின் பங்கு பெரியது.

இதற்கு அடுத்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அவருக்கு நல்ல முறையில் அமையவில்லை. கையில் இருந்த இரண்டு போட்டிகளை அவர் சரியாக விளையாடாததால் ஆர் சி பி அணி தோற்க வேண்டியதாக இருந்தது. இதன் காரணமாக தினேஷ் கார்த்திக் மீது நிறைய விமர்சனங்கள் கடந்த வருடத்தில் உருவானது. குறிப்பாக டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அவர் சரியாக விளையாடாதது விமர்சனங்களை அதிகமாக்கி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்து, நடப்பு ஐபிஎல் சீசனை விளையாடி வருகிறார். முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக நெருக்கடியான நேரத்தில் 26 பந்துகளுக்கு 38 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்த அவரது பேட்டிங் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது.

இதற்கடுத்து நேற்று கடைசி நான்கு ஓவர்களுக்கு 47 ரன்கள் தேவை என்ற நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக பத்து பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் தினேஷ் கார்த்திக் 28 ரன்கள் அடித்தார். இவரது அதிரடியின் காரணமாக கையை விட்டு நழுவிக் கொண்டிருந்த போட்டியை ஆர்சிபி அணி வென்று முதல் வெற்றியை நடப்பு ஐபிஎல் தொடரில் பதிவு செய்தது.

இந்த நிலையில் நேற்றைய போட்டி குறித்து நகைச்சுவையாக பேச ஆரம்பித்த தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “நான் ரிங்கு சிங் பினிஷிங் பேட்டிங்கால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவர் இந்த இடத்தில் மிகவும் அருமையாக பேட்டிங் செய்கிறார். இப்படியான சிறப்பான மனிதர்களை பார்த்து நான் கற்றுக் கொள்கிறேன். மேலும் நகைச்சுவை தள்ளி வைத்துப் பார்த்தால், நான் இப்படியான சூழ்நிலையில்தான் என்னுடைய பயிற்சிகளை செய்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பைக்கு மட்டும் இல்ல..10 ஐபிஎல் டீமுக்கும் ரோகித் சர்மாதான் கேப்டன் – சுரேஷ் ரெய்னா பேட்டி

இதற்கான பெருமை என்னுடைய பயிற்சியாளருக்கு சேர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகஅவர் என்னுடன் இருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் தொடர்ந்து என்னை அவர் வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் இப்படியான சூழ்நிலை வரும் பொழுது நான் போட்டியை எப்படி மதிப்பீட்டு என்னை அமைதியாக வைத்துக் கொள்வது என்று பார்க்கிறேன். மேலும் அந்த சூழ்நிலைக்கு சரியான ஷாட்டை முடிவு செய்து அதை நான் சரியாக செயல்படுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.