மும்பைக்கு மட்டும் இல்ல..10 ஐபிஎல் டீமுக்கும் ரோகித் சர்மாதான் கேப்டன் – சுரேஷ் ரெய்னா பேட்டி

0
547
Rohit

கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரில் இருந்து கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் ரோகித் சர்மாவின் செயல்பாடு மிகவும் சிறப்பாக மாறியிருக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு அவர் அணியை அழைத்துச் சென்ற விதம் அபாரமாக இருந்தது. துரதிஷ்டவசமாக கோப்பையை வெல்ல முடியாமல் போனது.

இதற்கு அடுத்து உள்நாட்டில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை, விராட் கோலி போன்ற பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாமலே, இளம் வீரர்களைக் கொண்டு, கேப்டனாக ரோகித் சர்மா நான்குக்கு ஒன்று என தொடரை வென்றார். இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக ரோஹித் சர்மா கேப்டன்சி மற்றும் பேட்டிங் மீது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பெரிய அளவில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்து இருக்கிறது. 30 வயதிற்குப் பிறகு அவருடைய பேட்டிங் புள்ளி விபரங்கள் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு இருக்கிறது. எனவே அவர் கிரிக்கெட்டை எதிர்பார்த்ததை விட இன்னும் சில ஆண்டுகள் அதிகம் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜஸ்ட்பிரித் பும்ரா திரும்பியது, மினி ஏலத்தில் நல்ல வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கியது என மும்பை இந்தியன்ஸ் அணி வலிமையாக மாறியது. இப்படியான நிலையில் வலிமையான அணியை கேப்டன் ரோஹித் சர்மா கையில் கொடுக்காமல், டிரேடிங் மூலம் ஹர்திக் பாண்டியாவை வாங்கி, அவர் கையில் கேப்டன் பொறுப்பை கொடுத்தது பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். குஜராத் அணிக்கு எதிராக நடந்து முடிந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா மீதும் அணி நிர்வாகம் மீதும் தங்களுக்கு இருக்கும் எதிர்ப்பை வெளிப்படையாக மைதானத்தில் வெளிப்படுத்தினார்கள். ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழந்து வெளியேறிய போது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அதை வரவேற்றது, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

இதையும் படிங்க : ரிங்கு சிங் 5 சிக்ஸ் அடிச்சதும்.. என்னை தடுத்தும் அங்க போய் வேதனைப்பட்டேன் – ஆர்சிபி யாஸ் தயால் பேட்டி

இந்த நிலையில் ரோஹித் சர்மா பற்றி பேசியுள்ள சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது ” ரோகித் சர்மா வான்கடே மட்டுமில்லாமல் எங்கு சென்றாலும், அவருக்கான ரசிகர் பட்டாளம் மிக வலிமையாக இருக்கிறது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியை வழிநடத்திய விதமும், அவர் பேட்டிங்கில் செயல்பட்ட விதமும் பெரிய மதிப்பை உருவாக்கி இருக்கிறது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு 10 ஐபிஎல் அணிகளில் இருந்தும் டி20 உலக கோப்பைக்கு இந்திய வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். எனவே அவர் தற்போது பத்து ஐபிஎல் அணிகளுக்கும் அடிப்படையில் கேப்டனாக இருக்கிறார். அவரை கேப்டன் இல்லை என்று சொல்ல முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -