ரோகித் சர்மா கிடையாது.. இப்ப பெஸ்ட் ஓபனர் உலகத்துல இவர்தான் – குமார் சங்கக்கரா பேச்சு

0
226
Rohit

நடப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணி மிகச் சிறப்பான முறையில் விளையாடி, நான்கு போட்டிகளில் நான்கையும் வென்று, தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. முதல் நான்கு போட்டிகளையும் வென்று இருப்பதால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது சுலபமானதாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில் கடைசியாக அந்த அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் ஜெய்ப்பூரில் விளையாடியது. இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடிக்க பெங்களூர் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. ஆடுகளம் பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமாக இருப்பதாக விராட் கோலி கூறியிருந்தார்.

- Advertisement -

இப்படியான நிலையில் தனது நூறாவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 58 பந்துகள் விளையாடி இறுதி வரை ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து 100 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நான்காவது தொடர் வெற்றியை பெற்றுத் தந்தார்.

ஆர்சிபி வீரர்கள் தடுமாறிய, விராட் கோலி பேட்டிங் செய்ய கடினமாக இருக்கிறது என்று கூறிய ஆடுகளத்தில் ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் இருவரும் அதிரடியாக விளையாடிய 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். மேலும் மிக எளிதாக இரண்டு ஓவர்கள் மீதம் இருக்கும் பொழுதே வெற்றியும் பெற்று விட்டார்கள்.

இந்த நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கரா பேசும் பொழுது “தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் மிகச்சிறந்த துவக்க ஆட்டக்காரர் எங்கள் அணியின் ஜோஸ் பட்லர்தான். அவர் செய்ய வேண்டியது எல்லாம் வெளியில் இருந்து எழுந்த சத்தங்களை கண்டுகொள்ளாமல் இருந்து, தன்னுடைய திறமையில் கவனம் செலுத்துவதுதான். அதை அவர் சரியாக செய்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா விரும்பின ஒன்னு நடந்திருக்கு.. இனியும் அது அப்படியே தொடரும் – ரோகித் சர்மா பேச்சு

நூறாவது போட்டியில் சதம் அடித்தது குறித்து பேசி இருந்த ஜோஸ் பட்லர் “நீங்கள் எவ்வளவு காலம் கிரிக்கெட் விளையாடினாலும் உங்களது பேட்டிங் ஃபார்ம் குறித்த பேச்சுக்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். எனவே நானும் திறமையில் கவனம் செலுத்தி தொடர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். நான் இப்படித்தான் என்னுடைய வேலையில் கடுமையாக தொடர்ந்து உழைத்து வந்தேன். இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்திருந்தேன். நான் அப்பொழுதும் நல்லவிதமாக விளையாடியதாக தான் உணர்ந்தேன்” என்று கூறி இருக்கிறார்.