டி20 உலககோப்பை விளையாட தயாராக இருக்கேன்.. இந்த 3 பேர நம்புறேன் – தினேஷ் கார்த்திக் அதிரடி அறிவிப்பு

0
40
DK

நடைபெற்று வரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் அபாரமான முறையில் பினிஷிங் ரோலில் விளையாடி வருகிறார். இதன் காரணமாக நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் பினிஷராக 226 ரன்கள் எடுத்து அபாரமான ஃபார்மில் இருந்து வருகிறார். குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் பெங்களூர் அணிக்கு எதிராக குவித்த போட்டியில், தினேஷ் கார்த்திக் விளையாடிய விதம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

- Advertisement -

அவர் இந்த வருடம் ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் தனது கடைசி ஐபிஎல் தொடரில் விளையாடும் தினேஷ் கார்த்திக் மிகச் சிறப்பான பேட்டிங் செயல் திறனை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக அவர் பினிஷிங் ரோலில் சிறப்பாக விளையாடுகின்ற காரணத்தினால், அவருடைய மதிப்பு அதிகமாக இருக்கிறது.

இதன் காரணமாக அவர் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் நிறைய இருந்து வருகிறது. கடந்த முறையும் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு, அந்த வருடம் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு தேர்வானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதை விட சிறப்பான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. நான் இந்த முறை இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விரும்புகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : நேர்மையா சொல்றேன்.. தோனியின் இந்த அணுகுமுறையில் எனக்கு நம்பிக்கை கிடையாது – கவுதம் கம்பீர் பேச்சு

டி20 உலகக் கோப்பைக்கு சிறந்த இந்திய அணி எதுவாக இருக்கும் என்பதை தீர்மானிக்க நேர்மையாக மூன்று நபர்களால் மட்டுமே முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் மற்றும் அஜித் அகர்கர் ஆகிய மூன்று பேர்தான். நான் எப்பொழுதும் இந்த மூன்று பேருடனும் இருக்கிறேன். நான் அவர்கள் எடுக்கும் எந்த முடிவையும் நான் மதிக்கிறேன். மேலும் நான் விளையாட தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.