கோலி ரோகித் கிடையாது.. இப்ப உலகத்துல சிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான் – தினேஷ் கார்த்திக் கணிப்பு

0
162
DK

இன்று உலக கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர்களாக இருந்து வருகிறார்கள். இந்த சமயத்தில் உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரராக வேறொரு இந்திய வீரரை தினேஷ் கார்த்திக் தேர்வு செய்து பேசியிருக்கிறார்.

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து, மிகவும் புள்ளி பட்டியலில் பின்தங்கி இருக்கிறது. முதல் மூன்று போட்டிகளில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பெற்று வலிமையாக வந்திருக்கிறது. இதன் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மேலும் புள்ளி பட்டியலில் பின்னடைவுகளை சந்திக்கலாம்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பௌலிங் யூனிட் மிகவும் பிரச்சினையாக இருக்கும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக அவர்களின் சிறப்பான பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பி அதிர்ச்சி அளித்திருக்கிறது. விராட் கோலியை தவிர மற்ற எல்லா நட்சத்திர பேட்ஸ்மேன்களும் அந்த அணிக்கு எந்த பங்களிப்பையும் தரவில்லை.

தற்பொழுது பேட்டிங்கில் கீழ் வரிசையில் தினேஷ் கார்த்திக்கை மட்டுமே அந்த அணி நம்பி இருக்கிறது. அவர் ஒரு போட்டியையும் வென்று கொடுத்திருக்கிறார். இப்படி இருந்த போதும் கடைசி ஆட்டத்தில் அவர் இறங்க வேண்டிய இடத்தில் கேமரூன் கிரீனை இறக்கி தவறு செய்தார்கள். இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் நிறைய விஷயங்கள் தொடர்பாக மனம் விட்டு பேசி வருகிறார்.

தினேஷ் கார்த்திக் தற்போது உலக கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர் யார் என்பது குறித்து பேசும் பொழுது “நேர்மையாக சொல்வது என்றால், மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடி மிக அதிகபட்ச திறமையை வெளிக்காட்ட கூடியவராக பும்ரா மட்டுமே இருக்கிறார். இதன் காரணத்தினால்தான் தற்போது உலகின் மிக மதிப்புமிக்க வீரராக நான் அவரை கருதுகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : கடவுள்கிட்ட இருந்து பொறுப்பு கிடைச்சிருக்கு.. ருதுராஜ் இதை பண்ணா மட்டுமே தப்பிக்க முடியும் – மைக்கேல் வாகன் பேட்டி

பும்ராவை பொறுத்தவரை அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார். அதே சமயத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தனது திறமையால் பெரிய தாக்கங்களை உருவாக்குகிறார். தற்பொழுது இப்படி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் செயல்படக்கூடியவர்கள் வேறு யாரும் இல்லை. எனவே பும்ராதான் உலகின் மிகச்சிறந்த வீரராக இந்த காலகட்டத்தில் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.