“ஆக்ரா to நொய்டா.. இன்னைக்கு எல்லாரும் பார்ப்பாங்க.. இந்த டிரஸ்தான் முக்கியம்” – துருவ் ஜுரலுக்கு தினேஷ் கார்த்திக் செய்தி

0
250
Dhruv

இந்திய அணியில் இன்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்ப்ராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் என இரண்டு வீரர்கள் அறிமுகம் ஆக இருக்கிறார்கள்.

ஆனால் இன்றைய போட்டி நேரம் முடிவதற்கு 20 ஓவர்கள் முன் இருக்கும் பொழுது நுழைந்து அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த சப்ராஸ் கான் சதம் அடித்திருக்கும் ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பேட்டிங்கையே மறக்க வைத்து விட்டார்.

- Advertisement -

இந்த காரணத்தினால் நிறைய பேர் இன்றைய போட்டியில் அறிமுகமாகி நாளை பேட்டிங் செய்ய காத்துக் கொண்டிருக்கும் துருவ் ஜுரல் பற்றியும் மறந்து விட்டார்கள்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் களம் இறங்கி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிரடியாக 15 பந்தில் 32 ரன்கள் குவித்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்தான் இந்த துருவ் ஜுரல்.

- Advertisement -

இதற்கு அடுத்து சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராகவும், விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக கீழ் வரிசையில் வந்து குறிப்பிடும்படி இரண்டு அரை சதங்கள் அடித்து இருந்தார்.

இஷான் கிஷான் மனச்சோர்வு காரணமாக ஓய்வில் இருப்பதால் அவரை தேர்வுக்குழு இந்த டெஸ்ட் தொடருக்கு பரிசீலனை செய்யவில்லை. இதன் காரணமாக இவருக்கு எதிர்பாராத விதமாக வாய்ப்பு கிடைத்தது. கே எஸ் பரத் ஒழுங்காக விளையாடாததால் அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

இவருக்கு இந்திய அணியில் அறிமுகமாவதற்கான தொப்பியை வழங்கியவர் இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக். தொப்பியை வழங்கி அவர் இவருக்கு சில அறிவுரைகளையும் வாழ்த்தையும் தெரிவித்திருக்கிறார்.

தினேஷ் கார்த்திக் தன்னுடைய வாதத்தில் கூறும் பொழுது “ஆக்ராவில் இருந்து நொய்டாவிற்கு சென்று, தாயுடன் பல கடினமான நேரங்களை கடந்து இருப்பீர்கள். இப்படியான நேரத்தில் உங்களுக்கு இந்த பயணத்தில் உதவியவர்கள் இருப்பார்கள். இன்று எல்லோருமே உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இதையும் படிங்க : “எங்கப்பா வரமாட்டேனு சொன்னாரு.. இப்ப என் தோள்ல எந்த சுமையும் இல்ல” – சப்ராஸ் கான் சிறப்பு பேட்டி

நீங்கள் கிரிக்கெட்டுக்காக பல வண்ண ஆடைகளை அணிந்திருப்பீர்கள். ஆனால் இந்த வெள்ளை ஆடை மிகவும் தனித்துவமானது. இந்த ஆடையை அணிந்து கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது தெய்வீகமான மற்றும் தூய்மையான ஒன்று. கடினமான இந்த வடிவ கிரிக்கெட்டில் சாதிப்பது தரும் திருப்தி வேறு வகையானது” என வாழ்த்தியிருக்கிறார்.

- Advertisement -