42 வயசுல.. இளைஞர்கள் கூட மோதி விளையாட.. எனக்கு இதுதான் பெரிய உதவியா இருக்கு – தோனி ஆச்சரியமான தகவல்

0
286
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறியதை விட, இந்த ஐபிஎல் சீசன்தான் தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசனா? என்பது மிக முக்கியமான விவாதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கும் தோனி மிக முக்கியமான விஷயங்கள் பற்றி கூறியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அவருடைய இறுதிக்கட்ட பேட்டிங் எப்பொழுதும் போல மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஆரம்ப காலங்களில் அதிரடியாக விளையாடிய தோனியை மீண்டும் பார்ப்பது போலவே இருந்தது. இந்த நிலையில் திடீரென இரண்டு மாதம் மட்டும் வந்து சர்வதேச தரத்திலான வீரர்களுடன் மோதுவது குறித்து தோனி பேசியிருக்கிறார். அத்துடன் சமூக வலைதள பயன்பாடு பற்றியும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து தோனி கூறும் பொழுது “எனக்கு சமூக வலைதளங்களில் டிவிட்டரை விட இன்ஸ்டாகிராம்தான் பிடிக்கும். ஏனென்றால் அங்கு யாராவது ஏதாவது எழுதுகிறார்கள். அது அங்கு சர்ச்சையாக மாறுகிறது. டிவிட்டரில் உங்களால் 140 கேரக்டர்கள் வரையில் மட்டுமே எழுத முடியும். எனவே எழுதுவதை அவரவர் விருப்பப்படி புரிந்து கொள்கிறார்கள். இப்படிப்பட்ட இடத்தில் நான் ஏன் இருக்க வேண்டும்?

இதன் காரணமாகவே நான் அங்கு இருப்பதில்லை. இதனால் எனக்கு இன்ஸ்டாகிராம்தான் மிகவும் பிடிக்கும். அங்கு ஏதாவது ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ பதிவேற்றி விட்டு விடலாம். அதிலும்நான் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பது கிடையாது. ரசிகர்களுக்காக எப்பொழுதாவது ஏதாவது புகைப்படம் அல்லது வீடியோவை பதிவு செய்வேன்.

கிரிக்கெட்டை பொறுத்தவரையில் தற்பொழுது கடினமான விஷயமாக எனக்கு இருப்பது என்னவென்றால், ஆண்டு முழுவதும் நான் கிரிக்கெட் விளையாடுவது கிடையாது. ஆனால் எப்படி உடல் தகுதி உடன் இருப்பது. இங்கு வந்த உடனே சர்வதேச தரத்திலான இளம் வீரர்களுடன் மோத வேண்டியது இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : ரசிகர்களே தோனியின் 110 மீட்டர் சிக்ஸர் பாத்திங்களா.. எல்லாம் அதோடு முடிஞ்சு போச்சு – வாசிம் அக்ரம் பேச்சு

தொழில்முறையாக கிரிக்கெட் விளையாடுவது எளிதான விஷயம் கிடையாது. நீங்கள் சர்வதேச அளவில் இளம் வீரர்களை போல விளையாட வேண்டும் என்றால் அவர்களைப் போல உடல் தகுதியோடு இருக்க வேண்டும். நான் என் உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாட்டோடு இருக்கின்றேன். மேலும் நான் சமூக வலைதளத்தில் தொடர்ந்து இயங்காத காரணத்தினால் எனக்கு கவனச் சிதறல் உருவாவதில்லை” என்று கூறியிருக்கிறார்.