ரசிகர்களே தோனியின் 110 மீட்டர் சிக்ஸர் பாத்திங்களா.. எல்லாம் அதோடு முடிஞ்சு போச்சு – வாசிம் அக்ரம் பேச்சு

0
774
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடர் மகேந்திர சிங் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக அமைந்திருக்கிறதா? என்பது தற்போது பெரிய விவாதமாக மாறி இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் தன் கருத்தை கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி மொத்தமாக 161 ரன்கள் எடுத்திருக்கிறார். கடைசி கட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து ஸ்டிரைக் ரேட்டை 220 என மிகச் சிறப்பாக வைத்திருக்கிறார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக 110 மீட்டர் சிக்சர் அடித்திருக்கிறார்.

- Advertisement -

தோனியின் பேட்டிங் டச்சை பொறுத்த வரையில் எடுத்துக் கொண்டால் இந்த முறை மிகச் சிறப்பாக இருந்தது. அவரால் பேட்டிங் வந்தவுடனேயே பெரிய ஷாட்டுகளுக்கு செல்ல முடிந்தது. அவர் மிகச் சிறப்பான முறையில் பந்தை கனெக்ட் செய்தார்.

ஆனால் கடைசியில் துரதிஷ்டவசமாக இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 110 மீட்டர் சிக்ஸர் ஒன்றை ஓவரின் முதல் பந்தில் அடித்து, அதற்கு அடுத்த பந்தில் ஆட்டம் இழந்து விட்டார். இந்தப் போட்டியையும் அவர் முடித்து இருந்தால், அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விஷயமாக அமைந்திருக்கும்.

இந்த நிலையில் தோனியின் ஓய்வு குறித்து பேசி இருக்கும் வாசிம் அக்ரம் கூறும் பொழுது ” எம்எஸ்.தோனியின் எதிர்காலம் குறித்து எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. அவர் இத்தோடு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த முடிவு அவர் சார்ந்த ஒன்று.

- Advertisement -

இதையும் படிங்க: ப்ளே ஆஃப்ல கேகேஆர்க்கு எதிரா.. ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் நிச்சயம் இதை செய்வாரு – வாசிம் ஜாஃபர் பேட்டி

110 மீட்டர் சிக்ஸர் அடித்தது மட்டும் அவருடைய மரபு கிடையாது. அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய செய்திருக்கிறார். நல்ல மனநிலையை கொண்டு வந்தார், ஒரு கேப்டனாக அமைதியை கொண்டு வந்தார், கேப்டனாக சிறப்பான இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கிறார், இளம் வீரர்களை நல்ல முறையில் உருவாக்கி இருக்கிறார். ஆனால் அவர் அடித்த கடைசி 110 மீட்டர் சிஸ்டர் தான் அவரது ரசிகர்களுக்கு கடைசியாக அவரிடம் இருந்து கிடைத்த விஷயமாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.