“எங்கப்பா வரமாட்டேனு சொன்னாரு.. இப்ப என் தோள்ல எந்த சுமையும் இல்ல” – சர்பராஸ் கான் சிறப்பு பேட்டி

0
503
Sarfaraz

இன்று இந்திய சமூக வலைதளத்தில் அதிகப்படியாக பகிரப்பட்ட பெயராக இந்திய அணியின் இளம் வீரர் சர்பராஸ் கான் பெயர் தான் இருக்கும்.

கடந்த மூன்று சீசன்களாக ரஞ்சி கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் ரன்கள் குவித்து வரும் அவருக்கு, இந்திய அணியில் கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

ஆனால் வாய்ப்பு கிடைக்காமல் தள்ளிச் சென்றது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் பலருக்கு சர்ப்ராஸ் கான் மீது பரிதாப எண்ணம் உண்டு. அவருக்கு ஒரு வாய்ப்பாவது கொடுக்கப்பட வேண்டும் என பல இந்திய ரசிகர்கள் கூறி வந்தார்கள்.

இப்படியான நிலையில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக துவங்கிய மூன்றாவது போட்டியில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் பயிற்சியாளரான அவரது தந்தை தன் மகனுக்கு இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் தொப்பி கிடைத்ததை கண்ணீருடன் நேரில் வந்து பார்த்தது, மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்வாக அமைந்தது. இதனால் சர்பராஸ் கான் எப்படியாவது சாதிக்க வேண்டும் என பல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்தார்கள்.

- Advertisement -

அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போலவே உள்ளே வந்த அவர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து, 62 ரன்கள் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறியிருக்கிறார். இது எல்லாம் சேர்ந்து இன்று சமூக வலைதளத்தில் இந்தியாவில் பல பேர் அவருடைய பெயரை கூறும் சம்பவமாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில் இன்றைய நிகழ்வு குறித்து பேசி உள்ள சர்பராஸ் கான் கூறும் பொழுது ” நான் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு தொப்பியை பெறும் பொழுது என் தந்தை இங்கே இருந்தார். அவர் முன்னாள் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு.

முதலில்என்னுடைய தந்தை மைதானத்திற்கு வரவில்லை. பிறகு சிலர் அவர் இங்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன் காரணமாகவே அவர் போட்டியை பார்க்க வந்தார்.

என் தந்தை எனக்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளை நான் இப்பொழுது வீணடிக்க வில்லை. இதன் காரணமாக என்னுடைய தோள்களில் இருந்த சுமை விலகி விட்டது.

இதையும் படிங்க : சர்பராஸ் கான் தந்தை வைத்த கோரிக்கை.. நெகிழ வைத்த ரோகித் சர்மா – களத்தில் என்ன நடந்தது

நான் பேட்டிங் செய்ய வருவதற்கு நான்கு மணி நேரங்கள் பேடு கட்டிக் காத்திருந்தேன். நான் இன்னும் அதிகம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்” எனக் கூறியிருக்கிறார்.