எங்க வீரர்கள் ஐபிஎல் விட்டு போனது தப்பு கிடையாது.. பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கு – மைக்கேல் வாகன் பேச்சு

0
86
Vaughan

இந்த ஆண்டு ஐபிஎல் 17வது சீசனில் லீக் சுற்றின் கடைசியில் இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடுவதற்காக நாடு திரும்பி இருக்கிறார்கள். இது குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் சிலர் கடுமையான விமர்சனம் செய்திருந்தார்கள். ஆனால் தற்போது இங்கிலாந்து வீரர்கள் திரும்பி சென்றதற்கு ஆதரவாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேசியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் தற்போது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களின் ஆதிக்கம் தான் வெளிநாட்டு வீரர்களில் மிக அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிளேயிங் லெவனில் மட்டுமே மூன்று இங்கிலாந்து வீரர்கள் இடம் பெறும் அளவுக்கு இருக்கிறது. மேலும் பெஞ்சில் இன்னொரு இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் இருந்தார்.

- Advertisement -

தற்பொழுது பிளே ஆப் சுற்றுக்கு இடம் பெற்றிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லரையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பில் சால்ட்டையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வில் ஜேக்சையும் இழந்திருக்கிறது. இவர்கள் மூவருமே அவர்களது அணிக்கு மிக முக்கியமான வீரர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதற்காக சென்றுவிட்ட இங்கிலாந்து வீரர்கள் குறித்து கவாஸ்கர் இர்பான் பதான் ஆகியோர் மிகக் கடுமையான விமர்சனம் செய்திருந்தார்கள். ஆனால் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு முக்கிய காரணம் குறித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறும்பொழுது “இங்கிலாந்து வீரர்கள் தங்களுடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக செல்கிறார்கள் என்றால் அது மிக நியாயமானதுதான். அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறார்கள். பாகிஸ்தான் டி20 தொடர் இல்லாவிட்டால் நிச்சயம் அவர்கள் சென்று இருக்க மாட்டார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 42 வயசுல.. இளைஞர்கள் கூட மோதி விளையாட.. எனக்கு இதுதான் பெரிய உதவியா இருக்கு – தோனி ஆச்சரியமான தகவல்

மேலும் இது ஏற்கனவே கிரிக்கெட் காலண்டரில் குறிக்கப்பட்ட தொடர். கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு ஜோஸ் பட்லர் தலைமையில் அணி ஒருங்கிணைந்து முன்கூட்டியே தயாராகவில்லை. தற்பொழுது பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் மொத்த அணியும் ஒன்று கூடுகிறது. இது கடந்த முறை ஏற்பட்ட தவறுகளை இந்த முறை செய்யாமல் தடுக்க வைக்கும். மேலும் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடும் பொழுது அணி கலாச்சாரத்தில் வேலை செய்யப்படும். மேலும் வீரர்களுக்கான ரோல்கள் தெளிவாகும். இதனால்தான் எங்கள் வீரர்கள் சென்றார்கள்” என்று கூறி இருக்கிறார்.