“கோச் செய்ற வேலையா இது? கேப்டனையும் டீமையும் பஸ்க்கு அடியில் தள்ளிட்டிங்க” – தினேஷ் கார்த்திக் கண்டனம்

0
530
DK

இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி டெஸ்ட் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அரையிறுதி போட்டியில் தமிழக அணி மும்பையை எதிர்த்து மும்பையில் விளையாடியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பேட்டிங் செய்தது. வேகப்பந்து வீச்சுக்கு மிக சாதகமாக இருந்த சூழ்நிலையில் இந்திய அணி சீக்கிரம் விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகிவிட்டது.

- Advertisement -

அதே சமயத்தில் தமிழகத்தின் கேப்டன் சுழல் பந்துவீச்சாளர் சாய் கிஷோர் மிகச் சிறப்பாக செயல்பட்டு 106 ரன்களுக்கு ஏழு விக்கெட் என மும்பை அணியை தள்ளினார்.

ஆனால் அதற்குப் பிறகு வந்த சர்துல் தாக்கூர் அதிரடியாக விளையாடி மும்பை அணியை மீட்டதோடு பெரிய லீடிங் கிடைக்கவும் உதவி செய்தார். இதற்குப் பிறகு விளையாடிய தமிழக அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்து 70 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

நேற்று இந்த தோல்வி குறித்து பேசி இருந்த மும்பையைச் சேர்ந்த தமிழக அணியின் பயிற்சியாளர் சுலக்சன் குல்கர்னி தமிழக அணியின் கேப்டன் சாய் கிஷோர் மீது குற்றச்சாட்டை பட்டும்படாமல் வைத்திருந்தார்.

- Advertisement -

மும்பைக்காரரான தனக்கு மும்பையின் ஆடுகளம் குறித்தும், மும்பை வீரர்களின் மனநிலை குறித்து தெரியும் என்றும், ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது என்று ஏற்கனவே கண்டுபிடித்து விட்டதாகவும், மேலும் சாய் கிஷோர் முதலில் பேட்டிங் தேர்வு செய்து தவறு செய்து விட்டார் என்றும் கூறியிருந்தார்.

மேலும் இதைக் கூறிவிட்டு கால் இறுதிப் போட்டியில் கேப்டன் தன் உள்ளுணர்வின்படி செயல்பட்டதால்தான் வெற்றி கிடைத்தது, எனவே அரை இறுதியில் உள்ளுணர்வு படி அவர் செயல்பட்டது தவறாக போனதை நான் குறை சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஒரு அணியின் பயிற்சியாளர் தோல்வியில் முரண்பட்டு அணியின் கேப்டனை உள்குத்தாக பேசியது தற்பொழுது தமிழக கிரிக்கெட்டில் பரபரப்பாக மாறி இருக்கிறது. இதற்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : 9 மாதங்களுக்கு முன்பே இந்திய அணிக்கு எதிராக ஆஸி திட்டம்.. கிரீனை வைத்து புது காய் நகர்த்தல்

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “இது மிகவும் தவறானது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அணியை நாக் அவுட் சுற்றுக்கு கொண்டு வந்த கேப்டனை ஆதரிப்பதற்கு பதிலாக, நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கும் என்று நினைப்பதற்கு பதிலாக, பயிற்சியாளர் கேப்டனையும், அணியையும் பேருந்துக்கு அடியில் தள்ளி விட்டு விட்டார்” என்று கடுமையாகக் கூறியிருக்கிறார்.