9 மாதங்களுக்கு முன்பே இந்திய அணிக்கு எதிராக ஆஸி திட்டம்.. கிரீனை வைத்து புது காய் நகர்த்தல்

0
162
Green

டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

டேவிட் வார்னர் விளையாடி வந்த துவக்க இடத்தில், நான்காவது இடத்தில் விளையாடி வந்த ஸ்டீபன் ஸ்மித் தற்பொழுது களமிறங்கி வருகிறார். மேலும் அவருக்கு துவக்க இடத்தில் இருந்து இன்னும் சதம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதே நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் வரிசையில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற நான்காவது இடத்தில், வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கேமரா கிரீன் அதிரடியாக இறக்கப்பட்டார்.

நியூசிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டரி செய்ய கடினமான சூழ்நிலையில் கேமரா கிரீன் 174 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினார். ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் வரிசையில் இனி முக்கியமான நான்காவது இடம் இவருக்கு தொடர்ந்து கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் முதல் அடுத்து 2025 ஜனவரி வரை ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது.

- Advertisement -

பார்டர் கவாஸ்கர் தொடரில் உள்நாட்டில் தொடர்ச்சியாக இந்தியாவிடம் இரண்டு முறை கோப்பையை இழந்து, மேலும் இந்தியா வந்தும் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்து ஆஸ்திரேலியா தொடர் தோல்விகளை கண்டு வருகிறது.

எனவே இந்த முறை உள்நாட்டில் வைத்து இந்திய அணியை தோற்கடிப்பதற்கு ஆஸ்திரேலியா இப்பொழுதே தயாராகி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக கேமரூன் கிரீனை இந்தியத் தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கும் வெள்ளைப்பந்து தொடரில் இருந்து விலக்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய நியூசிலாந்து டெஸ்ட் போட்டிக்கு முன்பாக கேமரூன் கிரீன் உள்நாட்டு செஃபீல்ட் ஃசீல்ட் டெஸ்ட் தொடருக்கு அனுப்பப்பட்டார். அவர் அதில் டாஸ்மேனியா அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார். தற்பொழுது இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்பாக, பாகிஸ்தான் வெள்ளைப்பந்து தொடரை புறக்கணித்து, கேமரூன் கிரீன் இதே மாதிரி அனுப்பி வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கடைசி டெஸ்ட்.. முதல் இந்திய பேட்ஸ்மேன்.. காத்திருக்கும் ரோகித் சர்மா அதிரடி சாதனை

இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் வைத்து உலக கோப்பையை வென்றதை விட, ஆஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணியிடம் இருந்து பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்வதுதான் ஆஸ்திரேலியா அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும். எனவே இப்பொழுதே அதற்கான தயாரிப்புகளை துவங்கி இருக்கிறது!