“நீங்க ரெண்டு பேரும் ஸார்” – ரோகித் டிராவிட்டுக்கு துருவ் ஜுரல் உருக்கமான நன்றி

0
453
Jurel

இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் உள்நாட்டில் முதல்முறையாக சர்வதேச டெஸ்ட் தொடரை விளையாடும் இளம் இடது கை துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பிரம்மாண்டமாக ரன் குவித்திருக்கிறார்.

நான்காவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாள் ஆரம்பத்தில் கூட இந்திய அணியில் இருந்து ஜெய்ஸ்வால் எழுச்சியையே பல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதாகப் பார்த்து வந்தார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில் தான் மூன்றாவது நாள் முடிவிலும், நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் துருவ் ஜுரல் பேட்டிங்கில் காட்டிய திறமை மற்றும் பொறுப்பு பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தேவையான நேரத்தில் துருவ் ஜுரல் 46 ரன்கள் எடுத்தார். அப்பொழுதும் அவருடன் இணைந்து விளையாடுவதற்கு முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை.

இதேபோல் மிக முக்கியமான நேரத்தில் நான்காவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் அவருடன் இணைந்து விளையாடுவதற்கு முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. அழுத்தமான அந்த நேரத்தில் குல்தீப் யாதவை வைத்துக்கொண்டு மிகச்சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

- Advertisement -

அடுத்து ஆகாஷ் தீப்பையும் வைத்துக்கொண்டு மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொண்டு வந்தார். இங்கிலாந்து அணிக்கு கிடைக்க இருந்த பெரிய முன்னிலையை குறைத்து 90 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி மீண்டும் 120 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என தடுமாறிய பொழுது உள்ளே வந்து சரளமாக விளையாடி கில் மீது இருந்த அழுத்தத்தையும் வெளியே எடுத்தா. இவருடன் சேர்ந்து மிக முக்கியமான 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் வெற்றிக்கு காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதும் வென்றார்.

தற்பொழுது இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் பலர் இன்று சமூக வலைதளத்தில் எழுதும் பெயராகவும் தேடும் பெயராகவும் அவரது பெயர் மாறி இருக்கிறது. மேலும் பல முன்னாள் வீரர்களின் அவரது பொறுப்பான ஆட்டம் மற்றும் திறமை குறித்து பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க : “டெஸ்ட் கிரிக்கெட்ல இவங்களுக்கு வாய்ப்பு தர முடியாது.. காரணம் இதுதான்” – ரோகித் சர்மா வெளிப்படை பேச்சு

இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் இருவரும் தன்னை அனைத்து வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ட்வீட் செய்துள்ள துருவ் ஜுரல் ” இந்தப் பையனை நம்பியதற்கு மிகவும் நன்றி ரோஹித் பைய்யா மற்றும் ராகுல் ஸார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.