ஒரு ஆள் மட்டும் போதும்.. இர்பான் பதான் தேர்ந்தெடுத்த வித்தியாசமான டி20 உ.கோ இந்திய அணி

0
36
Irfan

நடப்பு ஐபிஎல் தொடர் அடுத்து மே மாதம் 26 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்த ஐந்து நாட்களில் ஜூன் ஒன்றாம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதற்கான தனது டி20 உலகக்கோப்பை இந்திய அணியை இர்பான் பதான் வெளியிட்டு இருக்கிறார்.

நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாடும் 20 அணிகளும் தங்களது அணியை மே ஒன்றாம் தேதிக்குள் ஐசிசி வசம் கொடுக்க வேண்டும். மேலும் அதில் மே 26 ஆம் தேதி வரையில் தேவைப்பட்டால் மாற்றங்களை செய்து கொள்ளலாம். எனவே ஏப்ரல் இறுதி வாரத்தில் அடுத்தடுத்து அணிகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தேர்வு செய்வதில், துவக்க ஆட்டக்காரர்கள் யார்? விக்கெட் கீப்பர்கள் யார்? என்பதில் நிறைய குழப்பங்கள் இருந்து வருகிறது. உதாரணமாக விராட் கோலியே துவக்க ஆட்டக்காரராக இருக்க வேண்டுமா? இதன் மூலம் மிடில் வரிசைக்கு புதிய இளம் வீரர்களை கொண்டு வரலாமா? என்று யோசிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இர்ஃபான் பாதாம் தன்னுடைய டி20 உலகக் கோப்பை இந்திய அணியை வெளியிட்டிருக்கிறார். இதில் ஆச்சரியப்படுத்தும் ஒரு முடிவாக விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை மட்டுமே வைத்திருக்கிறார். மாற்று துவக்க ஆட்டக்காரராக விராட் கோலி விளையாட முடிகின்ற நிலையில், அவர் ஜெய்ஸ்வாலை ரோகித் சர்மா உடன் அணியில் வைத்ததோடு, இன்னும் ஒரு துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லையும் அணியில் வைத்திருக்கிறார். அவருடைய இந்த வித்தியாசமான அணித் தேர்வு ரசிகர்களிடையே விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இர்ஃபான் பதான் தேர்ந்தெடுத்து இருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் சிவம் துபே இடம் பெற்று இருக்கிறார். பலராலும் எதிர்பார்க்கப்படும் ரிங்கு சிங் இருக்க, அவரது இடத்திற்கு வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஹரிதிக் பாண்டியாவையும் தேர்வு செய்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி சொன்ன இந்த மந்திரம்தான்.. நேற்று சிஎஸ்கேவை முடிச்சுவிட உதவி பண்ணுச்சு – மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் பேட்டி

இர்பான் பதான் தேர்ந்தெடுத்து இருக்கும் 2024 டி20 உலகக்கோப்பை இந்திய அணி:

ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் சிங், பும்ரா, சிராஜ் மற்றும் சுப்மன் கில்.