நான் எது செஞ்சாலும் என் பேர்லயே எழுதுங்க.. நான் தோனி கிடையாது – துருவ் ஜுரல் ஓபன் பேட்டி

0
119
Dhoni

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வாய்ப்பு பெற்ற விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கும் வீரராக வெளிப்பட்டு இருக்கிறார். விக்கெட்டுகளுக்கு பின்னால் அவர் காட்டிய ஆட்ட விழிப்புணர்வு மற்றும் ஆட்ட சூழ்நிலையை புரிந்து கொண்டு பேட்டிகள் விளையாடிய விதம், அவரை இந்திய கிரிக்கெட்டில் எதிர்கால வீரராக அடையாளப்படுத்தி இருக்கிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருடைய செயல்பாட்டை பார்த்த இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் அவரால் அடுத்த மகேந்திர சிங் தோனியாக வர முடியும் என்றும், அதற்கான அடிப்படையான விஷயங்களை அவர் கொண்டிருக்கிறார் என்றும், தோனி செய்ததில் பாதி விஷயங்களை அவர் செய்தாலும், அது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து எல்லாம் பேட்டி அளித்திருக்கும் துருவ் ஜுரல் கூறும்பொழுது “என்னை தோனி சார் உடன் ஒப்பிட்டு பேசியதற்கு நன்றி கவாஸ்கர் சார். ஆனால் தோனி பாய் செய்ததை யாராலும் செய்ய முடியாது என்பதை நான் சொல்லிக் கொள்ள விருப்பப்படுகிறேன். தோனி ஒருவர்தான். எப்போதும் அந்த இடத்தில் அவர் மட்டுமே இருப்பார்.நான் துருவ் ஜுரலாகவே இருக்க விரும்புகிறேன். நான் என்ன செய்தாலும் துருவ் ஜுரலாகவே வெளிப்பட விரும்புகிறேன்.

கிரிக்கெட்டின் தூய்மையான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஒரு நாள் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவேன் என்று நம்பினேன். நான் அண்டர் 19 அணியில் விளையாடும் பொழுது இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகள் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது சாத்தியம் கிடையாது என்பதை பின் உணர்ந்தேன்.

என்னை பொறுத்தவரை ஐபிஎல் தொடர் எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீதான காதலை எந்த விதத்திலும் குறைக்க கிடையாது. இந்திய டெஸ்ட் அணியின் தொப்பியை பெற்றது வித்தியாசமான உணர்வு. இந்த இரண்டு கிரிக்கெட் வடிவங்களுக்கும் இடையில் எனக்கு எந்த போட்டியும் கிடையாது.

- Advertisement -

அடுத்து இந்திய அணியில் எப்படி எங்க இடம் பெறுவது என்பது குறித்து நான் எதுவுமே சிந்திக்க கிடையாது. உண்மையைச் சொல்வது என்றால், இது குறித்து எல்லாம் அதிகம் சிந்திக்க வேண்டியது இல்லை. நம்மால் எதை கட்டுப்படுத்த முடியுமோ அதை கட்டுப்படுத்தினால் போதும்.

இதையும் படிங்க : பாபர் அசாம் கோலியுடன் ஐபிஎல் விளையாடனுமா? – பாக் ரசிகருக்கு ஹர்பஜன் சிங் தந்த நச் பதில்

என்னுடைய தந்தை ராணுவ கார்கில் வீரர் அவரைப் போலவே என்னையும் உருவாக்க நினைத்தார். எனக்கு கிரிக்கெட் மீது தான் விருப்பம் இருந்தது. அவர் என்னுடைய கிரிக்கெட்டை ஆதரிக்கவில்லை. என்னுடைய தாய்தான் ஆதரித்தார். இறுதியில் தான் எனக்காக காஷ்மீர் வில்லோ மரத்தில் 5000 ரூபாய்க்கு ஒரு பேட் வாங்கி தந்தார். எனக்கு ஒரு கிரிக்கெட் கிட் தேவைப்பட்ட பொழுது என் தாய்தான் தங்கச் சங்கலியை விற்று வாங்கி தருவதாக கூறினார். என் தந்தை ராணுவ வீரர் என்கின்ற காரணத்தினால் உணவு மற்றும் பயிற்சியில் எப்பொழுதும் கண்டிப்பானவர்” என்று கூறி இருக்கிறார்.