ருதுராஜ் பேட்டிங்கில் காட்டிய ஒரு வித்தை.. தல தோனி காட்டிய பிரமிப்பு ரியாக்சன்.. களத்தில் என்ன நடந்தது?

0
2792
Dhoni

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்து நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்திருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி ஒரு ஆச்சரியமான முடிவை செய்திருந்தது. கேப்டன் ருதுராஜ் துவக்க ஆட்டக்காரராக வராமல், ரகானே துவக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்டார். மும்பை மைதானத்தில் முதல் மூன்று ஓவர்கள் விளையாட கடினமாக இருக்கும். மேலும் ரகானே கீழ் வரிசையில் வைத்திருப்பது ரன் குவிக்க சரிவராது. எனவே இந்த முடிவை சிஎஸ்கே எடுத்து இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ரகானே இன்றைய போட்டியில் 5 ரன்கள் 8 பந்துகளில் எடுத்து ஆட்டம் இழந்தார். ரச்சின் ரவீந்தரா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். இதற்குப் பிறகு மூன்றாவது இடத்தில் வந்த கேப்டன் ருதுராஜ் மற்றும் நான்காவது இடத்துக்கு வந்த சிவம் துபே இருவரும் ஜோடி சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள்.

இந்த ஜோடி முதல் 10 ஓவர்களில் பொறுமையாக விளையாடியது. சிவம் துவை இருந்த காரணத்தினால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா ஸ்பின்னர்களை கொண்டு வரவே இல்லை. இதனால் எல்லா பந்துவீச்சாளர்களையும் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இரண்டு பேட்ஸ்மேன்களும் வந்தார்கள்.

இந்த நிலையில் கேப்டன் ருதுராஜ் அபாரமாக விளையாட ஆரம்பித்தார். அப்போது ஆகாஷ் மதுவால் பந்தை உள்ளே யார்க்கராக வீசி ரன் அடிக்க முடியாமல் செய்ய திட்டமிட்டார். இதற்காக லெக் சைடு பீல்டிங்கை அமைத்தார். ஆனால் இந்தத் திட்டத்தை உடைத்து ரன்கள் எடுக்க ருத்ராஜ் லெக் சைடு நன்றாக தள்ளி சென்று, பில்டர்கள் வெளியில் இல்லாத ஆப் சைடில் சிக்ஸர், பவுண்டரி அடித்து ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

இதையும் படிங்க : 6,6,6.. 500 ஸ்ட்ரைக் ரேட்.. வான்கடேவை அதிரவிட்ட தல தோனி.. மிரண்ட மும்பை இந்தியன்ஸ்

இதை பெவிலியனிலிருந்து பார்த்த தோனி ” சான்சே கிடையாது அருமையான ஷாட்” என்பது போல ரியாக்சன் செய்து பாராட்டினார். தோனியே பாராட்டும் அளவுக்கு ருதுராஜ் மும்பை இந்தியன்ஸ் திட்டத்தை அருமையாக உடைத்து அழுத்தம் நிறைந்த நேரத்தில் ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.