6,6,6.. 500 ஸ்ட்ரைக் ரேட்.. வான்கடேவை அதிரவிட்ட தல தோனி.. மிரண்ட மும்பை இந்தியன்ஸ்

0
952
Dhoni

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் இன்று மும்பை வான்கடை மைதானத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிக்கான டார்சில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பனிப்பொழிவின் காரணமாக முதலில் பந்து வீசுவது என அறிவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. சிஎஸ்கே அணியில் தீkசனா இடத்தில் பதிரனா இடம் பெற்றார்.

- Advertisement -

பேட்டிங் செய்ய வந்த சிஎஸ்கே அணி எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக ரகானேவை துவக்க வீரராக அனுப்பி இருந்தது. அவர் 8 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னும் ஒரு துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து கேப்டன் ருதுராஜ் உடன் சிவம் துபே இணைந்தார். இந்த ஜோடி முதல் 10 ஓவர்களுக்குள் கொஞ்சம் பொறுமையாக விளையாடியது. பத்து ஓவர்கள் தாண்டியதும் இந்த ஜோடி ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்தது. சிறப்பாக விளையாடிய ருதுராஜ் இரண்டாவது அரைசதத்தை அடித்தார். அவருடன் இணைந்து விளையாடிய சிவம் துபேவும் 28 பந்தில் அரைசதம் அடித்தார்.

இந்த நிலையில் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு வெறும் 45 பந்துகளில் 90 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

இதையும் படிங்க : CSK vs MI.. ஓபனராக ரகானேவை அனுப்பிய கேப்டன் ருதுராஜ்.. வித்தியாசமான முடிவுக்கு காரணம் என்ன?

இதற்கு அடுத்து வந்த டேரில் மிட்சல் பொதுவாக விளையாடி 14 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதைத்தொடர்ந்து உள்ளே வந்த தோனி ஹர்திக் பாண்டியாவின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் பறக்க விட்டு அசத்தினார். கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார். மொத்தம் நான்கு பந்தில் 20 ரன்கள் அடித்தார். அவர் அடித்த அடி அவர் முன்பே வந்திருக்கக் கூடாதா என்பது போல இருந்தது. சிவம் துபே ஆட்டம் இழக்காமல் 38 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உடன் 66 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.