எனக்கு நிறைய நெருக்கடி இருந்தது.. கம்பீர் சதம் அடிக்கனும்னு நினைச்சேன் – மீண்டும் வைரல் ஆகும் தோனியின் பேட்டி

0
311
Dhoni

இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த ஆண்டு 1983. அந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 உலகக்கோப்பை தொடரை, யாரும் எதிர்பாராத வகையில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது. அந்த உலகக் கோப்பை வெற்றி, சச்சின் மாதிரியான ஒரு மாபெரும் வீரருக்கு அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய உந்துதலாக அமைந்தது.

உலகக் கோப்பை வரலாற்றை எடுத்துக் கொண்டால் 1993 ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றதும், 1996 ஆம் ஆண்டு இலங்கை உலகக் கோப்பையை வென்றதுதான் மிகவும் சிறப்பானது. ஆனாலும் இந்தியா வென்றதே மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. காரணம் அன்றைய சூழ்நிலையில் இந்திய அணி உலகக் கோப்பையை மட்டும் இல்லாமல் ஏதாவது போட்டிகளை வெல்லுமா? என்பது கூட பெரிய சந்தேகமான ஒன்றாக இருந்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு மீண்டும் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. இதற்கு நடுவில் பாகிஸ்தான், இலங்கை என இரு ஆசிய நாடுகள் உலகக் கோப்பையை வெல்ல, ஆஸ்திரேலியா பெரிய ஆதிக்கத்தை உலகக் கோப்பையில் நடுவில் செலுத்தியது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகப் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருந்தார்கள்.

2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை பலத்தை எதிர்பார்ப்புகளுக்கு இடையில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. அந்த குறிப்பிட்ட தொடரில் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் சுமாராக இருந்தது. இதன் காரணமாக தொடரின் நடுவில் அவர் மீதான விமர்சனங்களும் இருக்கவே செய்தது.

ஆனால் இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் விளையாடுவதற்கு முன்பாக வந்து ஆட்டமிழக்காமல் அவர் அடித்த 91 ரன்கள் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதே போட்டியில் மூன்றாவது இடத்தில் வந்த கம்பீர் 122 பந்தில் 97 ரன்கள் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று இந்தியா 28 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற நாள் ஆகும். இதன் காரணமாக தோனி அந்த உலகக் கோப்பை வெற்றி குறித்து பேசி இருந்த பழைய பேச்சு தற்பொழுது வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 டி20 உலககோப்பையில் பென் ஸ்டோக்ஸ் விலகல்.. விசித்திரமான காரணம்.. நடந்தது என்ன?

அதில் தோனி பேசும் பொழுது “நான் அந்த போட்டியில் யுவராஜ் சிங் முன் இறங்கினேன். அன்று ஏதாவது தவறாக நடந்து இருந்தால், அஸ்வின் ஏன் இல்லை? ஸ்ரீசாந்த் ஏன் இல்லை? என்பது போன்ற பல கேள்விகள் வந்திருக்கும். அதே சமயத்தில் நான் சரியாக விளையாடாமல் இருந்தேன். என்னை நான் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இருந்தது. என்னை பயிற்சியாளர் கேரி மற்றும் அணி நிர்வாகம் ஆதரித்தது. அந்த போட்டியில் விராட் கோலி நன்றாக பேட்டிங் செய்திருந்தார். ஆனால் நான் கம்பீர் சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று கூறியிருப்பார். தற்பொழுது இது தோனி ரசிகர்களால் பரப்பப்பட்டு வைரலாகி கொண்டு இருக்கிறது.