2024 டி20 உலககோப்பையில் பென் ஸ்டோக்ஸ் விலகல்.. விசித்திரமான காரணம்.. நடந்தது என்ன?

0
156
Stokes

தற்பொழுது இந்தியாவில் 17வது ஐபிஎல் சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் வருகின்ற மே மாதம் 26 ஆம் தேதி உடன் முடிவடைய இருக்கிறது. இதற்கு அடுத்து உடனே ஜூன் மாதம் ஐந்தாம் தேதி முதல் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

கடந்த முறை 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை ஜோஸ்பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் வென்று கைப்பற்றியது. தற்பொழுது டி20 உலகக்கோப்பை நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து அணி இருந்து வருகிறது.

- Advertisement -

2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்தது. இறுதிப் போட்டி நடைபெற்ற மெல்போன் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் இருந்தது. இந்த நிலையில் அசுரத்தனமான பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சை சமாளித்து பென் ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 52 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஒரு முனையில் இவர் நிலைத்து நின்று ஆடாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது.

பெரிய தொடர்களில் மிகவும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரராக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் இந்த முறை இங்கிலாந்து அணிக்காக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. குறுகிய வடிவ கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் மாதிரியான ஒரு வீரர் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை.

அவர் தொடர்ந்து பந்த வீசும் அளவுக்கு உடல் தகுதியில் முன்னேறி வருவதற்கான வேலைகளில் கவனம் செலுத்த இருப்பதால், நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாடவில்லை என காரணம் கூறப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து அடுத்து ஆஸ்திரேலியாவில் விளையாட இருக்கும் ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு தங்களை இப்பொழுதே முழுமையாக தயார்படுத்துவதாக தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : எங்க டீம் பத்தி நீங்க புரிஞ்சுக்க ஒரு விஷயம் இருக்கு.. அது இதுதான் – ஹர்திக் பாண்டியா மெசேஜ்

மேலும் கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்த இங்கிலாந்து அணி அறிவிப்பில் கடைசி நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.