CSK vs MI.. ஓபனராக ரகானேவை அனுப்பிய கேப்டன் ருதுராஜ்.. வித்தியாசமான முடிவுக்கு காரணம் என்ன?

0
431
Ruturaj

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டாவது போட்டியில் மும்பை வான்கடை மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மதிஷா தீக்சனா வெளியேறி, அவருடைய இடத்திற்கு மதிஷா பதிரனா வந்திருக்கிறார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகளை தோற்று இரண்டு போட்டிகளை வென்று, புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டியில் மூன்று போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வித்தியாசமான மாற்றத்தை செய்திருக்கிறது. கேப்டன் ருதுராஜ் ரகானே துவக்க ஆட்டக்காரராக அனுப்பிவிட்டு, அவரை மூன்றாவது வீரராக கீழே இறக்கிக் கொண்டிருக்கிறார்.

ரகானேவுக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் டேரில் மிட்சல் வரவேண்டும் என்று பலரும் கூறிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் ரகானேவை கீழே பயன்படுத்துவது சிரமம் என உணர்ந்து, அவருடைய சொந்த மும்பை மைதானத்தில் துவக்க ஆட்டக்காரராக அனுப்பி இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 15.4 ஓவர்.. பில் சால்ட் காட்டடி.. ஐபிஎல் வரலாற்றில் தனி சாதனை.. லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா..

மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் முதல் மூன்று ஓவர்களை விளையாடுவது மிகவும் கடினமானது. புதிய பந்தில் முதல் மூன்று ஓவர்களில் இங்கு ஸ்விங் மிக அதிகமாக இருக்கும். அதற்கு அடுத்து பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும். எனவே ருதுராஜ் தன்னை கீழே இறக்கிக் கொண்டிருக்கிறார். மூலம் ரகானாவின் இடமும் மாற்றப்பட்டு இருக்கிறது. சிஎஸ்கே மாஸ்டர் பிளானில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறது.