ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. சச்சினும் செய்யாத சாதனை.. 42 வயதில் தோனி மாஸ் சம்பவம்

0
542
Dhoni

இன்று ஐபிஎல் தொடரின் 35 வது ஆட்டத்தில் லக்னோ மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி ஐபிஎல் வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் ஷாமர் ஜோசப் நீக்கப்பட்டு மேட் ஹென்றி சேர்க்கப்பட்டார். சிஎஸ்கே அணியில் டேரில் மிட்சல் நீக்கப்பட்டு மொயின் அலி கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்ய வந்த சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திரா தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதற்கு அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் 13 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிஎஸ்கே அணி அதிரடியாக அடுத்து ரவீந்திர ஜடேஜாவை களம் இறக்கியது.

இந்த போட்டியிலும் துவக்க ஆட்டக்காரராக வந்த ரகானே 24 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடி வீரர் சிவம் துபே 8 பந்தில் 3 ரன்கள், இளம் வீரர் சமீர் ரிஸ்வி 5 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆனால் ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவது அரைசதத்தை 34 பந்தில் அடித்தார்.

தோனி ஸ்பெஷல் சாதனை :

அடுத்து மொயின் அலி 20 பந்தில் 30 ரன்கள் எடுத்து வெளியேற தோனி பேட்டிங் வந்தார். வழக்கம்போல் இந்த போட்டியிலும் அதிரடியாக 9 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 28 ரன்கள் எடுத்தார். இறுதிவரை ஆட்டம் இழக்காத ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 57 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியின் தரப்பில் குர்னால் பாண்டியா 3 ஓவர்களுக்கு 16 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்த போட்டியில் 28 ரன்கள் எடுத்ததின் மூலம் 40 வயதிற்கு மேல் ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கின்ற சாதனையை தோனி படைத்திருக்கிறார். 40 வயது கடந்து விளையாடிய பல லெஜெண்ட் வீரர்களால் ஐபிஎல் தொடரில் இந்த சாதனையை எட்ட முடியவில்லை.

40 வயதிற்கு மேல் ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள்:

500-எம்எஸ் தோனி
481 கிறிஸ் கெய்ல்
471 ராகுல் டிராவிட்
466 ஆடம் கில்கிறிஸ்ட்
164-சச்சின் டெண்டுல்கர்