“தோனி பாய் தேவைதான்.. ஆனால் அவர் செய்தது போதும் ஓய்வெடுக்கட்டும்” – தீபக் சகர் பரபரப்பு பேச்சு

0
153
Deepak

இந்திய இளம் வீரர்கள் தாண்டி வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்களும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் பேசவும் நேரம் செலவிடவும் விரும்புவார்கள்.

இதற்கு இரண்டு முக்கிய காரணம் தோனி மிகவும் எளிமையான பழக்கவழக்கங்களைக் கொண்டவர். எல்லோரையும் சமமாக நடத்தக்கூடியவர். அதே சமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து எளிமையான தெளிந்த புரிதலை வைத்திருப்பவர். எனவே அவரிடம் நேரம் செலவிடுவது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம்.

- Advertisement -

இதில் மிகவும் அதிர்ஷ்டசாலி கிரிக்கெட் வீரர் யார் என்றால் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தீபக் சகர்தான். இவர் மேல் தோனிக்கு தனிப்பட்ட முறையில் நிறைய பாசம் இருக்கிறது. தன் மகளுக்கு என்ன அறிவு இருக்குமோ அதுதான் தீபக் சகருக்கும் இருக்கும் என்கின்ற அளவுக்கு அவர் மேல் பிரியமாகத் தோனி இருக்கக்கூடியவர்.

மேலும் தோனி கிண்டல் கேலிகள் செய்து விளையாடக்கூடிய ஒரு இளம் வீரராக தீபக் சகர் மட்டும்தான் இருக்கிறார். விளையாட்டு நேரங்களில் விமான பயணத்தில் நிறைய நேரங்களில் அவர் மகேந்திர சிங் தோனி உடன் இருப்பதை பார்க்க முடியும்.

மகேந்திர சிங் தோனி உடனான நட்பு குறித்து பேசி உள்ள தீபக் சகர் கூறும் பொழுது “அவருடன் நான் இயல்பாக மாற எனக்கு இரண்டு மூன்று வருடங்கள் தேவைப்பட்டது. நான் அவரை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன். அவரும் என்னை தம்பியாக பார்ப்பார் என்று நம்புகிறேன். எங்களுக்கு வேடிக்கையான தருணங்கள் நிறைய இருக்கிறது.

- Advertisement -

கோவிட் நேரத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தோம். மேலும் நாங்கள் நிறைய விளையாட்டுகளை சேர்ந்து விளையாடி இருக்கிறோம். களத்திற்கு வெளியே நிறைய நேரம் செலவு செய்திருக்கிறோம். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டதில் நான் அதிர்ஷ்டசாலி.

அவரால்தான் எனக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது என்று நான் உறுதியாகச் சொல்வேன். 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் எனக்கு விளையாடுவதற்கு முழுதாக 14 ஆட்டங்கள் கொடுத்தார். அதுதான் நான் இந்திய அணிக்கு தேர்வாவதற்கு முக்கிய காரணம்.

இதையும் படிங்க : “2015 விராட் கோலி செய்ததை மறக்கவே மாட்டேன்.. அங்கேயே திருப்பி பதிலடி தந்தேன்” – எல்கர் வெளியிட்ட ஆச்சரிய தகவல்

தற்பொழுது அறுவை சிகிச்சை செய்திருக்கும் தோனி அவர்கள் முழுமையாக குணமடைந்து விட்டார். அவர் தனிப்பட்ட முறையில் இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் விளையாட வேண்டும் என்பது நம் விருப்பமாக இருக்கிறது. ஆனால் இது அவர் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. சென்னையில் தன்னுடைய கடைசி ஆட்டத்தை விளையாடுவேன் என்று அவர் எல்லோரிடமும் கூறி இருக்கிறார்.ஆனால் அவருடன் இருந்து பழகிவிட்டோம் அவர் இல்லாமல் சிஎஸ்கே அணியில் விளையாடுவது கடினமாக இருக்கும்.

ஆனாலும் கூட அவர் அணிக்கான பொறுப்பையும் அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் அவருக்கு அதையெல்லாம் எடுக்கக்கூடாது. ஏனென்றால் இது அவர் வாழ்க்கையின் இரண்டாவது பகுதி. அவருடைய வேலையை அணியில் செய்வதற்கு ஜடேஜா போன்று பலவீரர்களை அணியில் தயார் செய்திருக்கிறார். அவர்கள் அதை நன்றாக செய்வார்கள்” என்று கூறியிருக்கிறார்.