நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.ஆனாலும் கூட அந்த அணிக்கு சாதகமான ஒரு விஷயமாக, அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 25 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் அதிரடியாக 55 ரன்கள் குவித்தார்.
சாலை விபத்தில் சிக்கி மறுவாழ்வை முடித்துக்கொண்டு கிரிக்கெட் களத்திற்கு வந்திருக்கும் ரிஷப் பண்ட் எப்படி மீண்டும் செயல்படுவார் என்பது குறித்து எல்லோருக்கும் சந்தேகங்கள் இருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் நல்ல ரன்கள் கிடைக்காத நிலையில், சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு எதிராக அதிரடியாக தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்து இருக்கிறார்.
டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர்கள் யார் என்பது இன்னும்முடிவு செய்யப்படாமல் இருந்து வருகிறது. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் செயல்பட்டால், அவர் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்காக பரிசீலிக்கப்படுவார் என ஜெய் ஷா ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது திடீரென அவர் பிசியோவை உள்ளே அழைத்தார். இதனால் அவருக்கு ஏதாவது பிரச்சனைகள் உடல் ரீதியாக ஆரம்பித்து விட்டதா? என்கின்ற சந்தேகங்கள் எழ ஆரம்பித்தது. தற்பொழுது இதுகுறித்து தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “நேற்று ரிஷப் பண்ட் பேட்டிங் செய்த விதத்தில் அவர் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். நேற்று பேட்டிங் செய்ய களம் இறங்கும் பொழுதே அதிரடியாக விளையாட வேண்டி சூழ்நிலை இருந்தது. எனவே நேற்று இப்படியான சூழ்நிலையில் விளையாடியது அவருக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்து இருக்கும். அந்தப் பெரிய ரன்னை சேஸ் செய்வதற்கான இடத்தில் ரிஷப் பண்ட் இருந்தார்.
இதையும் படிங்க : கில் சூரியகுமார் கலவை.. இந்த 18 வயசு பையன் இந்தியாவுக்கு எதிர்கால வீரரா வருவான் – இந்திய முன்னாள் வீரர் பாராட்டு
அவர் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது களத்தில் பிசியோவை அழைத்ததை நான் பார்த்தேன். அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒன்று அவருக்கு சோர்வாக இருந்திருக்கும் இல்லையென்றால் சிறிது தசைப் பிடிப்பு இருந்திருக்கும். ஆனால் இதைத் தாண்டி அவர் பேட்டிங் செய்த விதத்தை நாம் கவனிக்க வேண்டும். நேற்று இரவு பேட்டிங்கில் அவர் செயல்பட்ட விதம் மிக மிக முக்கியமானது” எனக் கூறியிருக்கிறார்.