கில் சூரியகுமார் கலவை.. இந்த 18 வயசு பையன் இந்தியாவுக்கு எதிர்கால வீரரா வருவான் – இந்திய முன்னாள் வீரர் பாராட்டு

0
227
Raghuvanshi

நேற்று டெல்லி கேப்பிட்டல் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் முதல் முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு, கொல்கத்தா அணியின் 18 வயது இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்சிக்கு கிடைத்தது. இதை மிகச் சிறப்பாக பயன்படுத்தி 27 பந்துகளில் 200 ஸ்டிரைக் ரேட் உடன் 54 ரன்கள் குவித்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

இவர் டெல்லியில் பிறந்து மும்பை மாநில அணிக்காக விளையாடுகிறார். யாஸ் துல் தலைமையில் இந்திய அணி 2020ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை கைப்பற்றிய அணியில் துவக்க ஆட்டக்காரராக இடம் பெற்று இருந்தார். அந்தத் தொடரிலேயே இவரது சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது.

- Advertisement -

மேலும் மும்பை மாநில அணிக்காக 7 டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்த போதிலும் இவரது பேட்டிங் பெரிய அளவில் இல்லை. இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 116 என்று குறைவாகத்தான் இருந்தது. ஆனால் நேற்று களம் இறங்கியதுமே அன்றிச் நோர்க்கியா பந்தில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார். பிறகு சுழற்பந்திலும், வேகப் பந்திலும் சுவிட்ச் ஹிட் ஷாட்கள் அடித்து ஆச்சரியப்படுத்தினார்.

இந்த இளம் வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ஆரம்பத்தில் சுனில் அதிரடி காட்டிய பிறகு 18 வயதான இளம் வீரர் ரகுவன்சி வந்தார். இவரும் தன்னை இந்திய கிரிக்கெட்டின் புதிய அடையாளமாகக் காட்டினார். இதே ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவ் தன் முன்னால் இருப்பது மேக்ஸ்வெல், கிரீன், பேர்ஸ்டோ யாராக இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் பந்துவீசி காட்டினார்.

இதே ரகுவன்சிக்கு எதிரே இருப்பது அன்றிச் நோர்க்கியா கலீல் அகமத் என்று யாரைப் பற்றியும் கவலை இல்லை. அவர் வந்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். மேலும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். இவர் விளையாடியது எனக்கு கில் மற்றும் சூரியகுமாரை நினைவுபடுத்தியது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் ஜெயிக்க காரணம் இந்த இந்திய வீரர்.. குழந்தையில் இருந்தே என்கூட இருக்கிறார் – கேகேஆர் ரகுவன்ஷி பேட்டி

அவர் ஒரு கப்லா ஷாட்டை விளையாடினார். அந்த படம் மட்டும் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தால் அதை அடித்தது சூரியகுமார் யாதவ் என்று தான் எல்லோரும் சொல்வார்கள். பின்பு காலுக்கு வந்த சில பந்துகளை அவர் விளையாடியதை பார்த்த பொழுது கில் விளையாடியது போலவே இருந்தது. ரகுவன்சி பேட்டிங் முற்றிலும் தனித்துவமானது” என்று கூறி இருக்கிறார்.