சாத்தியமே இல்லாத வேலையை ரிஷப் பண்ட் செய்கிறார்.. நேத்து இதை பார்த்து மிரண்டுட்டேன் – ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டி

0
518
Rishabh

நேற்று ஐபிஎல் தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் செயல்பாடு பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டி இருக்கிறார்.

ரிஷப் பண்ட் நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிக் செய்த குஜராத் டைட்டன் அணி வெறும் 89 ரன்கள் மட்டும் எடுத்து 17.3 ஓவர்களில் சுருண்டது. அந்த அணிக்கு ரஷித் கான் மட்டும் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். டெல்லி பந்துவீச்சு தரப்பில் முகேஷ் குமார் மூன்று விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து களம் இறங்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல் ரன் ரேட் பெறுவதற்காக வேகமாக விளையாடியது. நேற்று 90 ரன் இலக்கை 8.4 ஓவர்களில் எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் அபாரமாக செயல்பட்ட மற்றும் பேட்டிங்கில் 11 பந்தில் 16 ரன்கள் எடுத்த கேப்டன் ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாலை விபத்தில் சிக்கி குணமடைந்து திரும்ப ஐபிஎல் தொடருக்கு வந்திருக்கும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செயல்பாடு மிகவும் திருப்தி அளிக்க கூடியதாக இருக்கிறது. இதன் காரணமாக அவர் வருகின்ற டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வாகவும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றது.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் நேற்று மில்லருக்கு பிடித்த கேட்ச் பற்றி பேசிய ஆடம் கில்கிறிஸ்ட் “பந்து வீச்சாளர் ரவுண்ட் த ஸ்டெம்பில் இருந்து வந்து பேட்ஸ்மேனுக்கு பந்தை வீசுகிறார். இந்த கோணத்திலிருந்து பந்து ரிஷப் பண்ட்டுக்கு வெளியே செல்லும். ஆனால் பந்து மில்லருக்கு எட்ஜ் ஆகி திரும்பி உள்ளே செல்கிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் வலது புறத்தில் இருந்து இடது புறத்திற்கு திரும்பி மிகவும் அற்புதமான ஒரு கேட்ச் எடுத்தார். இது நம்ப முடியாத ஒன்று. அவர் மிக வேகமாக இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க ஜெயிக்க ஒரே வழி இது மட்டும்தான் இருந்தது.. ஆனால் திரும்பி 6 போட்டிகளை ஜெயிப்போம் – சுப்மன் கில் பேட்டி

இந்த இடத்தில் உங்களுடைய டெக்னிக் மிக சரியாக இருக்க வேண்டும். அந்தப் பந்துக்கு உண்மையில் நீங்கள் திரும்பி வந்து பிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. அதற்குப் பெரிய அளவில் சக்தி வேண்டும். நேற்று டாஸ் முதல் ரிஷப் பண்ட்டுக்கு எல்லாம் நல்லதாக சென்றது. அவர் பந்துவீச்சு மாற்றங்களை சரியாக செய்தார், மேலும் பேட்டிங்கிலும் சில ஷாட் விளையாடினார். நேற்று அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது” என்று கூறியிருக்கிறார்.