14 முறையாக அசத்தல்.. ஸ்டப்ஸ் போராட்டம் வீண்.. டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி

0
99
IPL2024

இன்று ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல் முதலில் பவுலிங் செய்வது என முடிவு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க ஜோடி 80 ரன்கள் பார்ட்னர் அமைத்தது. ரோகித் சர்மா 49 (27), இஷான் கிஷான் 42 (23) ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் தந்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 0 (2), திலக் வர்மா 6 (5), கேப்டன் ஹர்திக் பாண்டியா 39 (33) ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். கடைசிக்கட்டத்தில் டிம் டேவிட் 45* (21), ரொமாரியோ ஷெப்பர்ட் 39* (10) ரன்கள் என மொத்தம் 13 பந்துகளில் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டினார்கள்.

இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தின் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஐந்து ஓவர்களில் 96 ரன்கள் குவித்ததோடு, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. டெல்லி கேப்பிடல் அணியின் தரப்பில் அக்சர் பட்டேல் நான்கு ஓவர்களுக்கு 35 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் 10 (8) என சொற்ப ரன்னில் வெளியேறினார். இதற்கு அடுத்து அபிஷேக் போரல் மற்றும் பிரிதிவி ஷா இணைந்து 49 பந்துகளில் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். பிரிதிவி ஷா 66 (46) ரன்னில் வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து அபிஷேக் போரல் 41 (31), கேப்டன் ரிஷப் பண்ட் 1 (3), அக்சர் பட்டேல் 8 (7), லலித் யாதவ் 3 (4), குமார் குஸ்கரா 0 (1) என அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஆனால் ஒரு முனையில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விட்டுக் கொடுக்காமல் பேட்டிங்கில் போராடினார். 19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் ஆட்டம் இழக்காமல் 25 பந்துகளில் 71 ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க : 21 வருடம்.. 13,000 ஆண்கள் டி20 போட்டி.. மும்பை இந்தியன்ஸ் அணி யாரும் செய்யாத சாதனை.. மாஸ் ரெக்கார்ட்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 205 மட்டுமே எடுத்தது. முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் பும்ரா நான்கு ஓவர்களுக்கு 22 ரன்கள் மட்டுமே விட்டு தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். அடுத்து ஜெரால்ட் போட்டி 4 விக்கெட் கைப்பற்றினார். மும்பை அணி 14 வது முறையாக தொடர்ச்சியாக 200 ரன்கள் எடுத்த போது எதிரணியை அதற்குள் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது.