இனி எங்க டீம்க்கு இவர்தான்.. இப்படித்தான் யோசிக்க போறோம்.. விளையாட போறோம் – ரிஷப் பண்ட் பேட்டி

0
317
Pant

நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான செயல்பாட்டை கொண்டு இருந்த டெல்லி அணி, இன்று லக்னோ மணிக்கு எதிராக அதன் சொந்த மைதானத்தில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. வெற்றிக்குப் பிறகு டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிக உற்சாகமாக பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு ஆயுஸ் பதோனி 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். கேப்டன் கேஎல்.ராகுல் 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

கடந்த இரண்டு போட்டிகளாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 200 ரன்களுக்கு மேல் எதிரணிகளுக்கு கொடுத்து வந்த காரணத்தால் வெற்றி பெற முடியாமல் போனது. பேட்டிங்கில் திருப்பி 200 ரன்கள் அடித்தாலும் கூட இலக்கை அவர்களால் எட்ட முடியவில்லை. ஆனால் இந்த முறை டெல்லி பந்துவீச்சாளர்கள் நல்ல விதத்தில் செயல்பட்டார்கள். குறிப்பாக குல்தீப் யாதவ் வந்தது அவர்களுக்கு நல்ல விஷயமாக அமைந்தது.

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு, ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட்டில் 29 பந்தில் அதிரடியாக சதம் அடித்திருந்த 22 வயதான வலது கை பேட்ஸ்மேன் பிரேசர் மெக்கர்க் 35 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். மேலும் இவர் இன்றைய போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷப் பண்ட் 24 பந்தில் 41 ரன்கள் எடுக்க, டெல்லி அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வென்றது.

வெற்றிக்குப் பின் பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் “இப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. நாங்கள் வெற்றியை மிக மோசமாக விரும்பினோம். நாங்கள் சாம்பியன் போல சிந்திக்க வேண்டும் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும் என அணியினரிடம் கூறியிருந்தேன். பந்துவீச்சில் எங்களிடம் சில பிரச்சினைகள் இருக்கிறது அதை சரி செய்ய வேண்டும். இதற்கு சில நபர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : புது பையனை பத்தி சரியா தெரியல.. கடுமையா சொல்றேன் நாங்க தோத்த காரணம் வேற – கேஎல்.ராகுல் பேட்டி

சிலவற்றை நீங்கள் கட்டுப்படுத்தலாம். சிலவற்றை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் இப்போது ஒரு சரியான பிளேயிங் லெவலை நெருங்கி வந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். எங்களுடைய அணியில் பல வீரர்களுக்கு காயங்கள் இருக்கிறது. இருந்தாலும் அதையே காரணமாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தற்போது எங்கள் அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்துக்கு பிரேசரை கண்டுபிடித்திருக்கிறோம். இனி அவர்தான் விளையாடுவார். அதைப் பற்றி நான் அதிகம் யோசிக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.