புது பையனை பத்தி சரியா தெரியல.. கடுமையா சொல்றேன் நாங்க தோத்த காரணம் வேற – கேஎல்.ராகுல் பேட்டி

0
2258
Rahul

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டியில், டெல்லி அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கிறது. தோல்விக்கான காரணங்கள் குறித்து கேஎல்.ராகுல் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு ஏழு விக்கெட்டுகள் 94 ரன்களுக்கு விழுந்துவிட்டது. இதற்கு அடுத்து இளம் வீரர் ஆயுஸ் பதோனி மிகவும் சிறப்பாக விளையாடி 35 பந்துகளில் 55 ரன்கள், பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது ஆக வந்த அர்ஷத் கான் 16 பந்தில் 20 ரன்கள் எடுக்க, லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் 167 ரன்கள் எடுத்தது. குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி 20 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இன்று அறிமுகமான ஆஸ்திரேலியாவின் 22 வயதான அதிரடி பேட்ஸ்மேன் பிரேசர் மெக்கர்க் 35 பந்தில் 55 ரன், கேப்டன் ரிஷப் பண்ட் 24 பந்தில் 41 ரன் எடுக்க, டெல்லி அணி 18.1 ஓவரில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்விக்குப்பின் பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல்.ராகுல் கூறும் பொழுது “கடுமையாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்.ஆனாலும் நாங்கள் ஒரு நல்ல தொடக்கத்தை பெற்றோம். எனவே நாங்கள் 180 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இந்த விக்கெட்டை குல்தீப் யாதவ் நன்றாக பயன்படுத்தி செயல்பட்டார். புதிய வீரராக வந்த பிரேசர் பற்றி எங்களுக்கு தெரியவில்லை. அவர் பந்தை மிகவும் நன்றாக அடித்தார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

நாங்கள் எப்பொழுதும் ஒரேமனநிலையுடன் இருக்க விரும்புகிறோம். சரியான பகுதிகளில் தாக்க நினைக்கிறேன். பவர் பிளேவில் வார்னர் விக்கெட் கிடைத்தது. இதற்கு அடுத்து இரண்டு விக்கெட் கிடைத்தன. ஆனால் பிரேசருக்கு தவறவிட்ட கேட்ச் தவறாக அமைந்து விட்டது. செட் ஆன பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 18.1 ஓவர்.. லக்னோ அணியின் பெருமை வரலாறை உடைத்து டெல்லி வெற்றி.. மெக்கர்க் ரிஷப் பண்ட் அதிரடி

அக்சர் படேல் பந்து வீசிய பொழுது பந்தில் பெரிய சுழற்சி இல்லை. எனவே பூரன் வந்து கொஞ்ச நேரம் நின்றால் பெரிய ரன்களுக்கு போவோம் என்று நினைத்தேன். இதனால் டெல்லி அணிக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று பிளான் பண்ணினேன். ஆனால் அவரை வந்ததும் வெளியேற்றிய பெருமை குல்திபுக்கே சேரும்” என்று கூறி இருக்கிறார்.