சாம்சனுக்கு சர்ச்சை அவுட்.. ராஜஸ்தான் போராடி தோல்வி.. பிளே ஆப் வாய்ப்பில் சிஎஸ்கே உடன் டெல்லி போட்டி

0
3214
Samson

இன்று ஐபிஎல் தொடரின் 56வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்று பிளே ஆப் வாய்ப்பில் டெல்லி நீடிக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. டெல்லி அணிக்கு 4.2 ஓவரில் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் முதல் விக்கெட்டுக்கு வந்தது. ஜாக் பிரேசர் மெக்கர்க் 20 பந்தில் அதிரடியாக 50 ரன்கள் எடுத்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் போரல் 36 பந்தில் 65 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து டெல்லி அணிக்கு டிரிஸ்ட்ன் ஸ்டப்ஸ் 20 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு ஓவர்களுக்கு 24 ரன்கள் தந்து மூன்று விக்கெட் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் 2 பந்தில் 4, ஜோஸ் பட்லர் 17 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து வந்த ரியான் பராக் 22 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். சாம்சன் உடன் இணைந்து ரியான் பராக் 33 பந்தில் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் வர வெளியேறினார்.

சாம்சனுக்கு சர்ச்சை அவுட்

இதைத்தொடர்ந்து சஞ்சு சாம்சன் தன் அதிரடியை நிறுத்தாமல் தொடர்ந்து அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். இறுதியாக அவர் 46 பந்துகளில் 8 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் இணைந்து விளையாடிய சுபம் துபே 12 பந்தில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த டோனவன் பெரீரா 1, அஸ்வின் 2 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் பேட்ஸ்மேனாக ரோமன் பவல் நின்றார். முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களுக்கு 21 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 12 போட்டியில் ஆறு வெற்றிகள் உடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தை டெல்லி பிடித்திருக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகளை வென்றால் பிளே ஆப் வாய்ப்பு உறுதி என்றும் சொல்லலாம்.

இதையும் படிங்க : 17 வருட ஐபிஎல் வரலாறு.. எந்த வீரரும் செய்யாத சாதனை.. ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடி ரெக்கார்டு

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் அடித்த பந்தை சாய் ஹோப் பவுண்டரி எல்லையில் பிடித்தது சர்ச்சைக்குரிய முறையில் அமைந்தது. அதற்கு நடுவர்கள் அவுட்டு கொடுக்க, களத்தில் சஞ்சு சாம்சன் நீண்ட நேரம் விவாதத்தில் ஈடுபட்டால். மேலும் வெளியில் இரு அணியின் பயிற்சியாளர்கள் சங்கக்கரா மற்றும் ரிக்கி பாண்டிங் கங்குலி ஆகியோரும் விவாதத்தில் ஈடுபட்டார்கள். ஆட்டத்தின் முடிவு மாறியதில் நடுவரின் இந்த முடிவு மிக முக்கியமானதாக அமைந்தது.