எங்க டீம்ல அவர் செய்யறதுல பாதி நான் செஞ்சா போதும்.. சந்தோசமா இருப்பேன் – ரச்சின் ரவீந்தரா பேட்டி

0
21067
Rachin

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கும் அவர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நியூசிலாந்து கிரிக்கெட்டில் இருந்து ஆரம்பத்தில் சிஎஸ்கே அணிக்கு ஸ்டீபன் பிளமிங் விளையாடினார். தற்பொழுது நீண்ட காலமாக சிஎஸ்கே அணிக்கு வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நியூசிலாந்தில் இருந்து ஜேக்கப் ஓரம், பிரன்டன் மெக்கலம், மிட்சல் சான்ட்னர் எனத் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு வந்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் நியூசிலாந்து தேசிய அணியில் இருந்து கான்வே வந்தார். அடுத்து இந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் இருந்து ரச்சின் ரவீந்தரா மற்றும் நேரில் மிட்சல் என இருவர் வந்திருக்கிறார்கள். தற்பொழுது மொத்தம் நான்கு நியூசிலாந்து வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரராகவும் மூன்றாவது இடத்திலும் வந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து எல்லோரது கவனத்தையும் ரச்சின் ரவீந்திரா கவர்ந்திருந்தார். எனவே மினி ஏலத்தில் பெரிய விலைக்குப் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பொழுது, சிஎஸ்கே அணிக்கு அவர் 1.80 கோடி ரூபாய்க்கு கிடைத்தார்.

மேலும் நியூசிலாந்து சேர்ந்த துவக்க ஆட்டக்காரர் கான்வே காயமடைந்து சிஎஸ்கே அணிக்கு தற்பொழுது விளையாட முடியாமல் இருப்பதால், ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த போட்டியில் வெறும் 15 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தை தந்து வெளியேறினார்.

இதேபோல் இன்று இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 20 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர் உடன் அதிரடியாக 46 ரன்கள் எடுத்து, அடுத்து வரக்கூடிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு வேலையை சுலபமாக்கி விட்டு சென்று விட்டார். தற்பொழுது இவரது அதிரடியான ஆட்டத்தால் அணி நிர்வாகமும் ரசிகர்களும் பெரிய மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு இவரை வெளிநாட்டு வீரராக தக்க வைக்க வேண்டும் என இப்பொழுதே ரசிகர்கள் கூற ஆரம்பித்து விட்டார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : என் டீம் எதிர்பார்க்கிறதும், மத்த டீம் எனக்கு எதிரா ப்ளான் பண்றதும் இதைத்தான்.. விடமாட்டேன் – சிவம் துபே பேட்டி

இன்றைய போட்டி முடிவுக்குப் பின் பேசிய ரச்சின் ரவீந்தரா “நான் அதிரடியாக இன்டெண்ட் காட்டி விளையாட விரும்பினேன். ருதுராஜ் உடன் பேட்டிங் செய்வது மிகவும் நன்றாக இருக்கிறது. அவர் மிகவும் நிதானமாக வழி நடத்துகிறார். ஒரு வீரராக எப்பொழுதும் பவர் பிளேவை பயன்படுத்த வேண்டும். சிஎஸ்கே அணிக்காக கான்வே செய்யும் விஷயங்களில் பாதியை நான் செய்தால் போதும் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியிருக்கிறார்.