சிஎஸ்கே தோல்வி.. முக்கிய காரணமாக அமைந்த தீபக் சாஹரின் 2 தவறுகள்.. ரசிகர்கள் கோபம்

0
5628
Deepak

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 7 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் அடுத்த மூன்று போட்டிகளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடக்கூடிய அற்புதமான வாய்ப்பு அமைந்திருந்தது. இந்த நிலையில் தீபக் சாஹரின் இரண்டு முக்கியமான தவறுகளால் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்திருக்கிறது.

ஐபிஎல் தொடரின் முதல் பாதிமுடிவடைந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு அதிர்ஷ்டவசமாக அடுத்த மூன்று போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்தது பெரிய வாய்ப்பாக பார்க்கப்பட்டது. இதில் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று விளையாடியது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூதுராஜ் 108 ரன்கள், சிவம் துபே 66 ரன்கள் என அதிரடியாக எடுத்தார்கள். இதன் காரணமாக சிஎஸ்கே அணி ஆரம்பித்த விதத்தை விட 210 ரன்கள் என்கின்ற பெரிய ஸ்கோரை எட்டியது. எனவே வெற்றிக்கான வாய்ப்பும் அதிகம் இருப்பதாக கருதப்பட்டது.

மேலும் லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் குயிண்டன் டி காக் ரன் இல்லாமலும், கேஎல்ராகுல் 16 ரன்னிலும், படிக்கல் மிகவும் தடுமாற்றமாக விளையாடி 19 பந்தில் 13 ரன்கள் எடுக்கும் ஆட்டம் இழந்த காரணத்தினால், சிஎஸ்கே அணி போட்டியில் வலிமையாக இருந்தது.

இப்படியான நிலையில் ஒரு முனையில் நின்று மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியில் மிரட்டி 56 பந்தில் சதம் அடித்தார். கடைசி 13 பந்துகளுக்கு 38 ரன்கள் தேவை என்கின்ற நிலை இருந்த பொழுது, தீபக் ஹூடா அடித்த பந்தை தீபக் சாஹர் கேட்ச் பிடிக்க தவற விட்டார். மேலும் பந்து சிக்ஸருக்கு சென்று விட்டது.

- Advertisement -

இதையும் படிங்க: சிஎஸ்கேவுக்கு எதிரா நாங்க பிளான் பண்ணது இதுதான்.. பூரன் வந்ததுதான் நிம்மதி – மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் பேட்டி

இதற்கு அடுத்து 12 பந்தில் 32 ரன்கள் தேவை என்ற நிலையில், பதிரனா வீசிய 19ஆவது ஓவரில் மீண்டும் தீபக் ஹூடா அடித்த எளிதாக பிடிக்க வேண்டிய பந்தை தீபக் சாஹர் தவறவிட்டார். இந்த பந்து பவுண்டரிக்கு சென்றது. மொத்தமாக இவரது தவறால் 10 ரன்கள் சென்றதோடு, ஒரு விக்கெட்டும் கிடைக்காமல் போனது. இது கடைசி 13 பந்துகளில் நடந்த தவறு என்பதால், வெற்றியை மிகக் கடுமையாக பாதித்துவிட்டது. இன்று சிஎஸ்கே அணி அடைந்த தோல்வியில் தீபக் சாஹருக்கு ஒரு முக்கிய பங்கு இதனால் துரதிஷ்டவசமாக ஏற்பட்டுவிட்டது!