சிஎஸ்கேவுக்கு எதிரா நாங்க பிளான் பண்ணது இதுதான்.. பூரன் வந்ததுதான் நிம்மதி – மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் பேட்டி

0
882
Stoinis

இன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக, ஒரு அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில், லக்னோ அணியின் வீரர் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட்டம் இழக்காமல் 63 பந்தில் 124 ரன்கள் குவித்து லக்னோ அணியை வெல்ல வைத்திருக்கிறார். ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு அவர் தனது திட்டங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை பனிப்பொழிவின் காரணமாக தேர்ந்தெடுத்துக் கொண்டது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் 60 பந்தில் 108 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து விளையாடிய சிவம் துபே அதிரடியாக 27 பந்தில் 66 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு ஆரம்ப வரிசையில் பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக விளையாடவில்லை. இடையில் வந்த நிக்கோலஸ் போறன் அதிரடியாக 15 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். ஆனால் மார்க்க ஸ்டோய்னிஸ் கடைசி வரை நின்று 63 பந்தில் 124 ரன்கள் குவித்து, லக்னோ அணிக்கு சாதனை வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் பேசும்பொழுது “இந்த ஐபிஎல் தொடரில் என்னை விட சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே இதை நான் அவர்களிடமே விட்டுவிடுகிறேன். இதுபோக நாங்கள் சில பந்துவீச்சாளர்களை குறிவைக்க விரும்பினோம். சில பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் எச்சரிக்கையாக இருக்க நினைத்தோம்.

நான் இந்த போட்டியில் பவுண்டரி அடிக்க முடியாத ஒரு நேரம் இருந்தது. அதனால் உள்ளே வந்த பூரனால் மட்டுமே அழுத்தத்தை குறைக்க முடியும். அவர் அந்த வேலையை சரியாக செய்தார். போட்டியில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தது அதை நான் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்தேன். நீங்கள் விஷயங்களை திட்டமிட்டு கட்டமைக்கிறீர்கள். சில பந்துவீச்சாளர்களை விரும்புகிறீர்கள், சில பந்துவீச்சாளர்களை விரும்புவதில்லை. டி20 கிரிக்கெட் தற்பொழுது நிறைய மாறி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இது நடக்கும்னு எனக்கு முன்னவே தெரியும்.. சிவம் துபேவுக்காக யாரையும் அவுட்டாக சொல்ல முடியாது – ருதுராஜ் பேட்டி

எங்கள் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் உடன் எனக்கு நல்ல தொடர்பு இருக்கிறது. தற்போது எனக்கு ஆஸ்திரேலியா அணியின் காண்ட்ராக்ட் கிடைக்கவில்லை. இது எனக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தெரியும். என்னுடைய இடத்திற்கு இளையவர்கள் வந்து நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. என்னுடைய இடத்தை அவர்கள் பெற அனுமதிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் என்னுடைய வாய்ப்பில் நான் பங்களிக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.