ஓபனா சொன்னா.. கில் இன்னும் நிறைய கத்துக்கனும்.. இவர் இல்லாதது எங்களுக்கு பிரச்சனை – டேவிட் மில்லர் பேட்டி

0
6202
Gill

நடப்பு ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி நான்கு பொட்டிகளை மட்டுமே வென்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. இதுகுறித்து அந்த அணியின் வீரர் டேவிட் மில்லர் பேட்டியளித்து இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று விட்டதும், பவர் பிளேவில் புதிய பந்தில் அபாரமாக பந்து வீசி வந்த முகமது சாமி காயத்தின் காரணமாக விளையாட முடியாமல் இருப்பதும் அந்த அணிக்கு பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் வெற்றியுடன் நடப்பு ஐபிஎல் தொடரை ஆரம்பித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நான்கு வெற்றிகள் சீக்கிரத்திலேயே கிடைத்தது. எனவே இந்த ஆண்டும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என பேச்சுகள் உருவானது. ஆனால் அதற்கு அடுத்து தொடர்ந்து தோல்விகளை சந்தித்து அந்த அணி தற்பொழுது மோசமான நிலைமையில் இருக்கிறது.

நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வி அடைந்த பிறகு டேவிட் மில்லர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்பொழுது “கில் ஒரு விதிவிலக்கான வீரர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அவர் இன்னும் இளமையாக இருக்கிறார். எனவே அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர் கேப்டன் பொறுப்பில் சரிவர செய்து வருவதாகவே நான் நினைக்கிறேன்.

- Advertisement -

எங்கள் அணிக்கு பவர் பிளேவில் முகமது சமி யாராலும் ஈடு செய்ய முடியாத விதிவிலக்கான ஒரு வீரராக செயல்பட்டு வந்தார். நாங்கள் உண்மையில் அவரை தவற விட்டதாக உணர்கிறோம். ஏனென்றால் அவர் பவர் பிளேவில் விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தவில்லை, மாறாக அவர் மிகவும் சிக்கனமாக ரன்கள் தராமலும் பந்து வீசி இருந்தார்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை சிராஜ மாத்திடுச்சு.. ஸ்மித்துக்கு அவர் செஞ்ச ஒரு சம்பவம் சாதாரணமில்ல – கவாஸ்கர் பாராட்டு

ஆர்சிபி பந்துவீச்சாளர்களின் லென்த்தை விட எங்களுடைய லென்த் மிகவும் சுமாராக இருந்தது. அவர்கள் மிகவும் சிறப்பான லென்த்தில் பந்து வீசினார்கள். நாங்கள் எங்களுடைய லென்த்தை தவறவிட்டோம். மேலும் அவர்கள் பவர் பிளேவில் இரண்டு ஓவர்கள் தாண்டி அரைசதம் அடித்து விட்டார்கள். பேட்டிங்கிலும் சரியாக செயல்படாமல் பந்துவீச்சும் இப்படி இருக்கும் ஒரு போட்டியை வெல்வது மிகவும் கடினம்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -