தல தோனியின் உலகசாதனை.. 2 வருடம் கழித்து ரிஷப் பண்ட்டின் மாஸ் கம்பேக்.. டெல்லி ரன் குவிப்பு

0
1048
Dhoni

இன்று ஐபிஎல் தொடரில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாசில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. மேலும் பிரித்வி ஷாவுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆட்டங்கள் போல் இல்லாமல் இந்த முறை டெல்லி துவக்க ஜோடி மிகச் சிறப்பாக விளையாடியது. டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இருவரும் சேர்ந்து பவர் பிளேவில் ஆறு ஓவரில் 62 ரன்கள் குவித்தார்கள். பவர் பிளே முடிந்து வந்த ரவீந்திர ஜடேஜாவையும் அதிரடியாக விளையாடினார்கள். இதனால் சிஎஸ்கே அணிக்கு களத்தில் கடுமையான நெருக்கடி உருவானது.

- Advertisement -

இதன் காரணமாக கேப்டன் ருதுராஜ் மதிஷா பத்திரனாரை பந்துவீச்சுக்கு கொண்டு வந்தார். அவர் தன்னுடைய ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்து டெல்லி அணியின் ரன் வேகத்திற்கு பிரேக்கை போட்டார். இதற்கு அடுத்து முத்தப்பிசூர் பந்துவீச்சில் ஸ்லீப்பில் நின்ற மதிஷா பதிரனா வார்னருக்கு அற்புதமான கேட்ச் ஒன்றை எடுத்தார். டேவிட் வார்னர் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த சிறந்த கேட்ச் மூலம் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை மதிஷா பதிரனா முடிவுக்கு கொண்டு வந்தார்.

இதற்கு அடுத்து ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் மகேந்திர சிங் தோனியிடம் கேட்ச் கொடுத்து, 27 பந்தில் 43 ரன்கள் எடுத்து பிரித்வி ஷா ஆட்டம் இழந்தார். மேலும் தொடர்ந்து டெல்லி பேட்ஸ்மேன் அதிரடியில் ஈடுபட கேப்டன் ருதுராஜ் மீண்டும் மதிஷா பதிரனாவை பந்து வீசிக்கு கொண்டு வந்தார்.

இதற்கு கைமேல் பலனாக மிட்சல் மார்ஸ் 18 (12), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0 (2) என அடுத்தடுத்து ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கர் மூலம் கிளீன் போல்ட் செய்து வெளியேற்றி மீண்டும் சிஎஸ்கே பக்கம் ஆட்டத்தை தனி வீரராக பதிரனா கொண்டு வந்தார். இதனால் டெல்லி கேப்பிடல் அணி மீண்டும் இந்த போட்டியில் பின்தங்கியது.

- Advertisement -

இந்த நிலையில் தனி ஆளாக போராடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் பதிரனா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : வார்னருக்கு காற்றில் பறந்து பதிரனா.. பிரமித்து போய் நின்ற தோனி.. சிஎஸ்கேவுக்கு முதல் திருப்புமுனை

மேலும் இன்றைய போட்டியில் பிரித்வி ஷா கேட்ச் தோனிக்கு டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக 300வது கேட்ச் ஆக பதிவானது. இதன் மூலம் முதன்முறையாக டி20 கிரிக்கெட்டில் 300 கேட்ச் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்கின்ற அரிய சாதனையை தோனி படைத்தார். தோனிக்கு அடுத்து 276-தினேஷ் கார்த்திக், 274-கம்ரான் அக்மல், 269 ​​- குயின்டன் டி காக், 208-ஜோஸ் பட்லர் ஆகியோர் இருக்கிறார்கள்.