நான் தென் ஆப்பிரிக்காதான்.. ஆனா நேபாள் ஜெயிக்கணும்னு நினைச்சேன்.. இதுதான் காரணம் – டேல் ஸ்டெய்ன் பேச்சு

0
120
Steyn

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நேபாள் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் வெல்ல வேண்டிய நிலையில் இருந்து நேபாள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது. இந்தப் போட்டி குறித்து டேல் ஸ்டெய்ன் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

இந்த குறிப்பிட்ட போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அனுபவம் குறைவான நேபாள் அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய நேபாள் அணி கடைசி ஓவரில் எட்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நான்கு விக்கெட்டுகளை கைவசம் வைத்திருந்தது. மேலும் முதல் மூன்று பந்தில் ஆறு ரன்கள் எடுத்தது. கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் வெற்றிக்கு தேவையாக இருந்தது.

இப்படி கையில் இருந்த வெற்றியை நேபாள் அணி ஒருவன் கூட எடுத்து போட்டியை டிரா செய்யாமல் இழந்தது. அவர்கள் இந்த போட்டியை வென்றிருந்தால் அவர்களுடைய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய முதல் வெற்றியாக அமைந்திருக்கும். ஆனால் அதை நெருங்கிக் கோட்டை விட்டார்கள்.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்காவின் லெஜன்ட் டேல் ஸ்டெய்ன் கூறும் பொழுது “இந்த போட்டி பார்க்க நம்ப முடியாததாக இருந்தது. இந்த உலக கோப்பையின் மிகச்சிறந்த போட்டியாக இருந்தது. நான் எப்பொழுதும் சிறிய அணிகளின் ரசிகன். நான் தென் ஆப்பிரிக்காவாக இருந்தாலும் கூட நேபாள் வெற்றி பெற விரும்பினேன். நீங்களும் இதைத்தான் விரும்பி இருப்பீர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க: கனடாவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து.. சூப்பர் 8 சுற்றில் இந்தியா விளையாடும் போட்டி அட்டவணை.. முழு விபரங்கள்

மிகவும் திரில்லராக இருந்தது. மைதானத்தில் ரசிகர்கள் அழுவதை நான் பார்த்தேன். இது மிகச் சிறந்த அர்த்தம் வாய்ந்தது. கிரிக்கெட் 200 ரன்கள் எடுப்பதில் கிடையாது. இதுதான் கிரிக்கெட் என்று நினைக்கிறேன். இதுதான் விளையாட்டு என்று நினைக்கிறேன். இன்று நேபாள் அணி வெற்றி பெற்று இருந்தால், அதுதான் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்திருக்கும்” என்று கூறி இருக்கிறார்.