கனடாவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து.. சூப்பர் 8 சுற்றில் இந்தியா விளையாடும் போட்டி அட்டவணை.. முழு விபரங்கள்

0
713
ICT

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளில் மழை மிக முக்கியமான பங்கை கொண்டு இருக்கிறது. நேற்று அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட பாகிஸ்தான் வெளியேறியது. இந்த நிலையில் இன்று இந்தியா கனடா அணிகள் மோத இருந்த போட்டியும் மழையால் கைவிடப்பட்டிருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் ஏ பிரிவில் இந்தியா, கனடா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து என நான்கு அணிகளின் கடைசிப் போட்டியும் அமெரிக்கா ஃபுளோரிடா மைதானத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக அமெரிக்க அணியின் கடைசி போட்டியும் தற்போது இந்திய அணியின் கடைசி போட்டியில் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது

- Advertisement -

மேலும் இந்த மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கான கடைசி போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியும் மழையின் காரணமாக கைவிடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது அமெரிக்காவா பாகிஸ்தானா என்கின்ற சுவாரசியத்திற்கு மழை மோசமான முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

இந்த நிலையில் ஏ பிரிவிலிருந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன. இதில் இந்திய அணி இடம்பெறும் குழுவில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெறுகின்றன. மேலும் நான்காவது அணியாக பங்களாதேஷ் அணி இடம்பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வருகின்ற 20ஆம் தேதி விளையாட இருக்கிறது. இந்த போட்டி பார்படாஸ், பிரிட்ஜ் டவுன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இரண்டாவது போட்டி 22ஆம் தேதி நார்த் சவுண்ட், ஆண்டிகுவா, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த பங்களாதேஷ் இல்லை நெதர்லாந்து அணி எதிராக வரும்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் சர்மா இந்த ஒரு விஷயத்தைப் பற்றி கவலையே பட மாட்டார்.. இதைத்தான் கத்துக்குறேன் – சஞ்சு சாம்சன் பேட்டி

இந்திய அணிக்கு சூப்பர் 8 சுற்றில் மூன்றாவது மற்றும் கடைசி முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 24ஆம் தேதி விளையாட இருக்கிறது. இந்தப் போட்டியில் செயிண்ட் லூசியா டேரன் சாமி மைதானத்தில் நடக்க இருக்கிறது. மொத்தம் மூன்று போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளை வென்று ரன் ரேட் நல்ல முறையில் இருந்தால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.