மறுபடியும் முட்டாள்தனத்தால் தோற்றுவிட்டு.. சிரிச்சுகிட்டு பேட்டி தரலாம் – ஸ்டெயின் ஹர்திக் பாண்டியா மீது விமர்சனம்

0
845
Hardik

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. நேற்றைய தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா மீது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. இது குறித்து டேல் ஸ்டெயின் மறைமுகமாகத் தாக்கி பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆச்சரியப்படுத்தும் விதமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தின் ஆடுகளத்தில் இரண்டாவது பேட்டிங் செய்வது தான் எப்பொழுதும் சாதகமாக இருக்கும்.

- Advertisement -

மேலும் நேற்று போட்டி முடிந்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இது குறித்து பேசி இருந்த பொழுது, ஆடுகளம் கடினமாக ஆரம்பத்தில் இருக்கும், அதுவே இரவில் கடுமையான குளிர் வந்த பிறகு, இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது ஆடுகளம் மிகவும் சுலபமாக மாறிவிடும் என்று கூறியிருந்தார். இத்தோடு டாஸ் இழந்தது நல்லது எனவும் ஆரம்பத்திலேயே பேசி இருந்தார்.

மேலும் நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் நோவன் துசாரா விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இவரோடு பும்ரா மற்றும் கோட்சி என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் இருந்தது. ஆனாலும் கூட முதல் ஓ வரை ஹர்திக் பாண்டியா வீசினார். நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி கொண்டு வந்த திட்டங்கள் எல்லாமே ஏன் என்று யாருக்குமே புரியவில்லை.

இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள், கிரிக்கெட்டை தொழில்நுட்ப ரீதியாக சார்ந்து நிறைய கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் கிரிக்கெட் முன்னாள் வீரர்களும் கடுமையான விமர்சனங்களை செய்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜெய்ஸ்வாலுக்கு யாரோட அட்வைசும் தேவையில்ல.. மேட்ச்ல டர்னிங் பாய்ன்ட் இந்த இடம்தான் – சஞ்சு சாம்சன் பேட்டி

இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறும்பொழுது “வீரர்கள் தங்கள் மனதில் இருப்பதை நேர்மையாகச் சொல்லும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நம்மையும், நம் மனதையும் ஊமையாக்கி விட்டு, அடுத்த போட்டியிலும் தோற்று, அந்த முட்டாள்தனத்தை மீண்டும் செய்கிறோம் என்று மறைமுகமாக ஹர்திக் பாண்டியாவை விமர்சனம் செய்திருக்கிறார்.