ரோகித் ஹர்திக் ஈகோ பிரச்சனை.. மும்பை இந்தியன்ஸ் கட்டாயம் இதை செய்யும் – டேல் ஸ்டென் பேச்சு

0
104
Steyn

2023 கடந்த ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனிக்காக எல்லா மைதானத்திலும் எல்லா அணியின் ரசிகர்களும் கூடினார்கள். மேலும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து வந்து மகேந்திர சிங் தோனிக்கு தங்கள் ஆதரவை தந்தார்கள். காரணம் அவருக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று நினைத்தார்கள். மகேந்திர சிங் தோனி கடந்த ஐபிஎல் தொடரின் முக்கிய பேசுபொருளாக இருந்தார்.

இந்த முறை அவருக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருப்பதற்கு மிக அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்ற நிலையில், அவர் பேசுபொருளாக இருப்பதற்கு பதிலாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ஏற்பட்டிருக்கிற பிரச்சினையே பெரிய பேசு பொருளாக மாறி வருகிறது. தற்போதைய ஐபிஎல் தொடர் இதைச் சுற்றியே நகரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மும்பை இந்தியன்ஸ் அணியால் வெளியேற்றப்பட்ட ஹர்திக் பாண்டியா, முதல் இரண்டு சீசனில் ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும், ஒரு முறை இரண்டாவது இடத்தையும் பிடித்து கேப்டனாக ஆச்சரியப்படுத்தி இருந்தார். அவருடைய ஐபிஎல் கேரியரின் கடைசி அணியாக குஜராத் டைட்டன்ஸ் இருக்கும் என எல்லோரும் நம்பினார்கள்.

இப்படியான நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ட்ரேடிங் மூலம் ஹர்திக் பாண்டியா திரும்பினார். இந்த முடிவை கிரிக்கெட் ரசிகர்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. ஹர்திக் பாண்டியா தனக்கு இடம் கொடுத்த குஜராத் டைட்டன்ஸ் அணியை ஏமாற்றி விட்டதாகவே நினைத்தார்கள்.

ஆனால் இதைவிட பெரிய ஒரு அதிர்ச்சியாக 10 ஆண்டுகளில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் நீக்கப்பட்டு, அவருடைய இடத்துக்கு புதிதாக திரும்பி வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்தது. இது ஒட்டுமொத்த ஐபிஎல் உலகத்தையும் ஸ்தம்பிக்க செய்தது உண்மை.

- Advertisement -

இந்த நிலையில் ஒரு அணிக்குள் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா எப்படி இருப்பார்கள்? அவர்கள் சுமுகமாக இணைந்து விளையாடுவார்களா? அவர்களுக்குள் இருக்கும் ஈகோ களத்தில் எதிரொலிக்குமா? என்பது குறித்து பல எதிர்பார்ப்புகளும் கேள்விகளும் ரசிகர்களுக்கு இருக்கிறது.

இதையும் படிங்க :

இதுகுறித்து பேசி உள்ள டேல் ஸ்டெய்ன் “மும்பை இந்தியன்ஸ் அணி எப்படியும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஒரு சிறிய முகாமை நடத்துவார்கள் என்று நம்புகிறேன். இந்த முகாம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதுவெல்லாம் தொந்தரவாக பிரச்சனையாக இருக்குமோ அதை எல்லாம் சலவை செய்து சரி செய்யும். மேலும் போட்டி நடக்கும் பொழுது அணிக்குள் ஏதாவது விரிசல் இருக்கிறதா என்று பார்க்கலாம். ஆனால் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடும் சர்வதேச வீரர்கள். இப்படியான சர்வதேச வீரர்களுக்கு ஈகோவை எப்படி ஒதுக்குவது என்பது தெரியும். போட்டி தொடங்கியதும் அவர்கள் தொழில்முறை வீரர்களாக விளையாடுவார்கள். அவர்கள் மும்பை அணிக்காக சிறப்பாக செயல்படுவார்கள்” என்று கூறி இருக்கிறார்.