5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு, பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.
இந்த தொடரில் முதலில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா அணியை அவர்களது நாட்டில் வைத்து வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியா அணி முதலாவது இடத்திலும் தொடர்ந்தன. ஆனால் இதற்கு அடுத்து அனுபவம் இல்லாத தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றது.
இதன் காரணமாக நியூசிலாந்து அணி முதல் இடத்திற்கும் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திற்கும் இடம் மாறின. இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இரண்டு அணிகள் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணி அதற்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று இருக்கிறது. இதன் காரணமாக தற்பொழுது இந்திய அணி எட்டுப் போட்டிகளில் ஐந்து வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டிரா என 64.58 வெற்றி சதவீதம் பெற்று, புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
முதல் இடத்தில், நான்கு போட்டியில் மூன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி, உடன் 75 வெற்றி சதவீதம் பெற்று நியூசிலாந்து அணி முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி 10 போட்டிகளில், ஐந்தில் வெற்றி, மூன்றில் தோல்வி, ஒரு டிரா என 55 வெற்றி சதவீதம் பெற்று மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
மேலும் தற்பொழுது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி அந்த அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் தொடரில் எப்படியான முடிவுகள் வந்தாலும், அது இந்திய அணிக்கு சாதகமானதாகவே அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : “ஸ்டார் பிளேயர்ஸ் இல்லனா என்ன.. பசங்க பட்டைய கிளப்பறாங்க” – கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சி
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்:
நியூசிலாந்து – 75%
இந்தியா – 64.58
ஆஸ்திரேலியா- 55%
பங்களாதேஷ் – 50%
பாகிஸ்தான் – 36.33%
வெஸ்ட் இண்டிஸ் – 33.33%
சவுத் ஆப்பிரிக்கா – 25%
இங்கிலாந்து – 19.44%
இலங்கை – 0.00%
— Richards Cric (@AadhanThiru) February 26, 2024