“ஸ்டார் பிளேயர்ஸ் இல்லனா என்ன.. பசங்க பட்டைய கிளப்பறாங்க” – கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சி

0
1501
Rohit

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இளம் வீரர்களுக்கு தனியான ஒரு சவாலை கொடுத்தது.

இதே சமயத்தில் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு இந்த முக்கியமான தொடரை வெல்ல வேண்டும் என்கின்ற பெரிய நெருக்கடி கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு இருந்தது.

- Advertisement -

களத்திற்கு வெளியே இளம் வீரர்களுக்கு மிகச்சிறந்த முறையில் நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்து, களத்திற்கு உள்ளே அவர்களை சிறப்பான முறையில் வழிநடத்தி, தனக்கு முன்னால் இருந்த சவாலில் கேப்டன் ரோகித் சர்மா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறார்.

வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது “இது மிகவும் கடினமான ஒரு தொடராக அமைந்திருக்கிறது. ஆனாலும் இதில் நாங்கள் சரியான முறையில் செயல்பட்டு வென்று இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுக்கு இந்த தொடரில் நிறைய சவால்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் நாங்கள் அதற்கு எல்லாவற்றுக்கும் சிறப்பான பதில் தந்திருக்கிறோம்.

- Advertisement -

எங்களுடைய இளம் வீரர்கள் இந்த முறையில் இங்கு இருக்க விரும்புகிறார்கள். உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் கிளப் கிரிக்கெட் விளையாடி சர்வதேச அளவில் வந்து சிறப்பாக செயல்படுவது என்பது பெரிய சவால். ஆனால் அவர்கள் சிறந்த முறையில் எனக்கு நல்ல பதில்களை கொடுத்து இருக்கிறார்கள்.

இளம் வீரர்களுக்கு அவர்கள் விரும்பும் மாதிரியான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியம். இளம் வீரர்கள் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஜூரல் மிகவும் நிதானமாகவும் அமைதியாகவும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகச் சிறப்பான விளையாடி இருக்கிறார்.

ஒரு தொடரில் நீங்கள் முக்கிய வீரர்களை தவிர விடுவது மகிழ்ச்சியான ஒன்று இல்லை. அவர்களது இடத்தை நிரப்புவதும் சாதாரணம் கிடையாது. ஆனால் மிகச் சிறப்பாக இதற்கு எல்லாம் பதில் கூறி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : “எனக்கு மட்டும் இல்ல பெருமையை இவங்களுக்கும் கொடுங்க.. என் பிளான் இதுதான்” – ஆட்டநாயகன் துருவ் ஜுரல் பேட்டி

இப்படி ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கும் பொழுது, இளம் வீரர்களுக்கு இது நீண்ட கிரிக்கெட் வாழ்க்கைக்கு நம்பிக்கையை கொடுப்பதாக அமையும். நாங்கள் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் வெல்ல வேண்டும் என்று வருகிறோம். இந்த போட்டியில் பெற்ற வெற்றி உடன் நம்பிக்கையை எடுத்துக்கொண்டு ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு செல்வோம்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -