“இந்திய செலக்டர்ஸ்.. இனி ஸ்ரேயாஸ் ஐயர பெருசா நினைக்கிறத விட்டு.. இவர மதிங்க” – ஆஸி லெஜன்ட் பேச்சு

0
251
Shreyas

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இது சில ஆச்சரியமான முடிவுகள் இடம் பெற்றிருந்தன.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொண்டு நடைபெற இருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை. மேலும் முகமது சமியும் காயத்தால் கிடைக்கவில்லை.

- Advertisement -

அதே சமயத்தில் காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரவீந்திர ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் இருவரும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார்கள்.

அதே சமயத்தில் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறி இருக்கிறார் என்று கூறப்பட்டது. உண்மையில் அவர் தேர்வுக்கு தயாராக இருந்ததாகவும், தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை என்றும் தகவல்கள் வெளியில் வந்திருக்கிறது.

ஷார்ட் பந்துகளுக்கு எதிராக அவருக்கு இருக்கும் பிரச்சனை அவருடைய கிரிக்கெட் கேரியருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. குறிப்பிட்ட பந்தை எதிர்பார்த்து மற்ற பந்துகளில் ஆட்டம் இழந்து அணிக்கு பெரிய நெருக்கடியை உருவாக்குகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய லெஜண்ட் இயான் சேப்பல் கூறும்பொழுது “இந்தியா ஒரு வலிமையான அணி. அவர்களுக்கு நல்ல தலைவர் ரோஹித் சர்மா இருக்கிறார். காயத்திலிருந்து திரும்ப வந்திருக்கும் ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் அவர்கள் அணியை வலிமைப்படுத்துவார்கள்.

ஆனால் விராட் கோலி எஞ்சிய தொடருக்கும் கிடைக்க மாட்டார் என்பது இந்திய அணிக்கு ஒரு அடியாகும். இப்போது இந்தியத் தேர்வாளர்கள் ஸ்ரேயாஸ் ஐயரின் திறமையை மிக அதிகமாக மதிப்பிடுவதை நிறுத்திவிட்டு, குல்தீப் யாதவின் பந்துவீச்சு திறனை அதிகமாக மதிப்பிடக் கற்றுக் கொள்வார்கள்” என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: “தோனி இப்பவே ஆரம்பிச்சிருப்பார்” – ஆஸி போட்டியில் மைக்கேல் ஹஸ்சி கில்கிறிஸ்ட் பேச்சு

இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் மிகவும் கடினமானது. தற்பொழுது டெஸ்ட் அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் அணியில் மட்டுமே அவர் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஒருநாள் கிரிக்கெட் இனி நிறைய போட்டிகள் நடக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.