சாம்பியன்ஸ் டிராபியில் குழப்பம்.. அரையிறுதி எங்கே என தெரியாததால் சிக்கல்.. SA,AUS என இரு அணிகள் துபாய்க்கு போகும்.. ஏன் தெரியுமா?

0
474

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பது பெரும் சிக்கல் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் கோபம் அடைய வைத்திருக்கிறது. அதாவது சாம்பியன் டிராபி  தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் மற்றும் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக மார்ச் இரண்டாம் தேதி இந்தியாவும் நியூசிலாந்து தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. மார்ச் மூன்றாம் தேதி ஓய்வு நாளாக இருக்கும் நிலையில் மார்ச் 4-ஆம் தேதி முதல் அரை இறுதி ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி துபாயில் பங்கேற்க உள்ளது.

- Advertisement -

அட்டவணையில் குழப்பம்:

ஆனால் இதுவரை குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலிய மட்டுமே அரை இறுதிக்கு சென்றிருக்கிறது. அவர்களும் தாங்கள் முதலிடத்தில் இருப்பார்களா இரண்டாவது இடத்தில் நிறைவு செய்வார்களா என்பது தெரியவில்லை. இதேபோன்று நியூசிலாந்தும் இந்தியாவும் மோதும் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் முதலிடம் செல்லும்.

இந்தியா தோல்வியை தழுவினால் இரண்டாவது இடத்திலே நீடிக்கும். பொதுவாக அரையிறுதியில் குரூப் ஏ வில் முதல் இடத்தில் இருக்கும் அணி குரூப் டி வில் உள்ள இரண்டாவது இடத்தில் உள்ள அணியையும், குரூப் ஏவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அணி குரூப் பி யில் முதலிடத்தில் இருக்கும் அணியும் எதிர்கொள்ளும்.

- Advertisement -

இடம் தெரியாமல் அலையும் அணிகள்:

இதனால் தற்போது இந்திய அணி எந்த இடத்தில் நிறைவு செய்கிறது என்று தெரிந்தால் மட்டுமே அரை இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளுமா? இல்லை தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளுமா என்பது தெரிய வரும். ஆனால் இந்தியா, நியூசிலாந்து போட்டிகள் இரண்டாம் தேதி தான் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி.. பயிற்சியில் நெட் பவுலருக்கு ஏமாற்றம்.. ஸ்ரேயாஸ் ஐயர் தந்த ஆச்சரிய பரிசு

இடையில் முதல் அரை இறுதிக்கு ஒரு நாள் தான் எஞ்சி இருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா என இரண்டு அணிகளுமே துபாய்க்கு செல்ல இருக்கிறார்கள். அதில் யார் அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறார்கள் என முடிவானவுடன் மற்ற ஒரு அணி மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி வந்துவிடும். இதுதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் கோபம் அடைய வைத்திருக்கிறது.இந்தியா யாரை எதிர்கொள்கிறது என தெரியாமல் இரண்டு அணிகளுமே துபாய்க்கு வந்துவிட்டு, பின் அதில் ஒரு அணி மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்புவது என்பது முட்டாள்தனமானது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

- Advertisement -